வியாழன், 5 ஏப்ரல், 2012

பன்னீ ர்ர்ர் செல்வம்: அம்மா'வின் நட்பே எங்கள் நட்பு பட்ஜெட் விவாதம்

 பட்ஜெட் மீதான பொது விவாதத்துக்கு, நிதியமைச்சர் பன்னீர்செல்வம் அளித்த பதில்
 ""எங்களுக்கென்று தனி சொந்தம் இல்லை. "அம்மா'வின் சொந்தமே எங்கள் சொந்தம். எங்களுக்கென்று தனி நட்பு இல்லை. "அம்மா'வின் நட்பே எங்கள் நட்பு. எங்களுக்கென்று தனி சிந்தனை இல்லை. "அம்மா'வின் சிந்தனையே எங்கள் செயல். எங்களுக்கென்று தனி வழி இல்லை. "அம்மா'வின் வழியே எங்கள் வழி. "அம்மா'வுக்கு எங்கள் உடல், பொருள், ஆவி என, அனைத்தையும் தத்தம் செய்தோம்,'' என்று, சசிகலா - ஜெயலலிதா உறவு குறித்து, நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது பதிலின் போது விளக்கினார்.

முதல்வர் வெளியிட்ட தொலைநோக்குத் திட்டத்தின் முக்கியமான நோக்கம், தமிழகத்தை வறுமையற்ற மாநிலமாக ஆக்குவதே. இவ்வாறு ஆக்க, தமிழகத்தை மாற்றியமைக்க வேண்டுமெனில், அனைவரையும் உள்ளடக்கிய வகையில் பொருளாதார வளர்ச்சி எட்டப்பட வேண்டும்.அதற்கு, நன்கு வடிவமைக்கப்பட்ட வறுமை ஒழிப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
வேலைவாய்ப்பை பெருக்கும் வகையில் தொழில் துறை, விவசாயம் போன்ற முதன்மைத் துறைகளின் வளர்ச்சியை வலுப்படுத்த வேண்டும். கல்வி, சுகாதாரம் போன்றவை மேம்படுத்தப்பட வேண்டும். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வகையில் பயிற்சி அளிக்க வேண்டும்.பட்ஜெட்டில் முதன்மைத் துறையின் வளர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. விவசாயம், கால்நடை, மீன்வளம், வன வளம், கூட்டுறவு, நீர்வளம் போன்றவற்றை உள்ளடக்கிய முதன்மைத் துறைக்கு, கடந்த ஆட்சியில், 2010-11ல் செய்யப்பட்ட ஒதுக்கீடு, 5,674.27 கோடி ரூபாய் மட்டுமே. ஆனால், 2012-13ல் இதற்கான ஒதுக்கீடு, 9,942.25 கோடி ரூபாய். இது 75 சதவீதம் கூடுதலாகும்.அடுத்ததாக, கட்டமைப்பு மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தொலைநோக்குத் திட்டத்தில், அடுத்த 11 ஆண்டுகளில், 15 லட்சம் கோடி ரூபாய், கட்டமைப்புக்கு முதலீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில், 1,000 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டதாக, சில உறுப்பினர்கள் பேசினர்.தொலைநோக்குத் திட்டம் என்பது, 11 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டம். அதற்கான விளக்கத்தை முதல்வர் அளித்துள்ளார். மின் பற்றாக்குறையை சீர் செய்ய, மின் வசதிகளை ஏற்படுத்த, இந்த திட்டத்தில் கூட, 4.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது. இந்த முதலீடு அரசின் மூலமாக மட்டுமல்லாது, அரசு, தனியார் பங்களிப்பு, மத்திய அரசு முதலீடு, தனியார் முதலீடு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியது.

தொலைநோக்குத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கை நோக்கங்களை எட்ட, விரைவில் புதிய திட்டங்கள் கொண்ட தொகுப்பு அறிக்கை வெளியிடப்பட்டு, அதனடிப்படையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் போது, தற்போது தொடக்கமாக ஒதுக்கப்பட்ட 1,000 கோடி ரூபாய் போதாது என்றால், மேலும் எவ்வளவு நிதி தேவையோ அவற்றை ஒருங்கிணைத்து ஒதுக்கீடு செய்ய அரசு தயாராகவே உள்ளது.கட்டமைப்பு திட்டங்களைச் செயல்படுத்த, கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்கு தொடக்க நிதியாக, 1,000 கோடி ரூபாய், நெடுஞ்சாலைத் துறைக்கு 5,251 கோடி, புதிய நகர் பஸ்கள் வாங்க 545 கோடி, மோனோ ரயில் திட்டம், மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 750 கோடி, மின் பகிர்மானக் கழகத்துக்கு 1,500 கோடி பங்கு மூலதனம், மின் பகிர்மான வசதிகளை மேம்படுத்த, 3,573 கோடி, நகர்ப்புறங்களில் ஏழை, நடுத்தர மக்களுக்கு வீட்டு வசதிகளை ஏற்படுத்த, தரை பரப்பளவு குறியீடு தளர்த்தும் திட்டம், 750 கோடி செலவில், கிராமப்புறங்களில் அடிப்படை கட்டமைப்பை ஏற்படுத்தும் தாய் திட்டம், 1,250 கோடி செலவில் இரண்டு நகர்ப்புற மேம்பாட்டு திட்டங்கள், மதுரை கட்டமைப்பை மேம்படுத்த 250 கோடி ரூபாய் சிறப்பு ஒதுக்கீடு என, பல திட்டங்களை குறிப்பிடலாம்.நிதி மேலாண்மையைப் பொறுத்தவரை, நிதிப் பற்றாக்குறை அளவோடு இருக்கலாம். தேவையான அளவு மட்டும் கடன் பெற்று, அந்த நிதிப் பற்றாக்குறையை ஈடு செய்யலாம். அவ்வாறு திரட்டப்படும் கடன், மூலதனப் பணிகளுக்காக மட்டுமே செலவிட வேண்டும்.மேலும், 1,500 கோடி ரூபாய் புதிய வரிகள் என்றனர். அந்த வரியும், சாமானியர்களை பாதிக்காத வகையில் தான் விதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு பன்னீர்செல்வம் பேசினார்.

அம்மா'வின் நட்பே எங்கள் நட்பு': பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு நிதியமைச்சர் பன்னீர்செல்வம் தனது பதிலுரையில், முதல்வர் ஜெயலலிதாவை வெகுவாகப் புகழ்ந்தார். உரையை துவக்கிய பன்னீர்செல்வம், ""பூகோள பாடத்தில் வேண்டுமானால் இந்தியாவின் தலைநகர் டில்லி என்று இருக்கலாம். ஆனால், அரசியல் வரைபடத்தில் இந்தியாவின் தலைநகர் இனி சென்னை தான். இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போவது, "அம்மா' தான்,'' என்று துவக்கினார்.தனது உரையை முடிக்கும் போது, ""எங்களுக்கென்று தனி சொந்தம் இல்லை. "அம்மா'வின் சொந்தமே எங்கள் சொந்தம். எங்களுக்கென்று தனி நட்பு இல்லை. "அம்மா'வின் நட்பே எங்கள் நட்பு. எங்களுக்கென்று தனி சிந்தனை இல்லை. "அம்மா'வின் சிந்தனையே எங்கள் செயல். எங்களுக்கென்று தனி வழி இல்லை. "அம்மா'வின் வழியே எங்கள் வழி. "அம்மா'வுக்கு எங்கள் உடல், பொருள், ஆவி என, அனைத்தையும் தத்தம் செய்தோம்,'' என்று கூறினார்.சசிகலா, ஜெயலலிதா உறவைத் தான், சொந்தம், நட்பு என்று அவர் சூசகமாக குறிப்பிட்டதாக புரிந்து கொண்ட, அ.தி.மு.க.,வினர் மேஜையை தட்டினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக