வெள்ளி, 27 ஏப்ரல், 2012

Automatic கார்களின் விற்பனை தொடர்ந்து அதிகரிப்பு

Automatic Cars
 
ஆட்டோமேட்டிக் கார்கள் என்றால் அலர்ஜியாக இருந்த இந்திய வாடிக்கையாளர்கள் தற்போது தங்களது விருப்பதை மாற்றிக்கொண்டுள்ளனர். தற்போது ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட கார்களை வாங்குவதில் இந்திய வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளனர்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய மார்க்கெட்டுகளில்தான் ஆட்டோமேட்டிக் கார்கள் அதிக வரவேற்பை பெற்றிருந்தன. இந்த நிலையில், இந்தியாவிலும் தற்போது ஆட்டோமேட்டிக் கார்களுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதிக மைலேஜ் தராது என்பதால், இந்தியாவில் மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட மாடல்களே விற்பனையில் சாதித்து வந்தன. ஆனால், நிலைமை தற்போது வேகமாக மாறி வருகிறது.போக்குவரத்து நெரிசலில் எளிதாக ஓட்டும் வசதியை ஆட்டோமேட்டிக் கார்கள் கொடுப்பதால், பெட்ரோல், டீசல் கார்களை விட விலை அதிகம் இருந்தாலும் பரவாயில்லை என கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டோமேட்டிக் கார்கள் பக்கம் வாடிக்கையாளர்கள் கவனத்தை திசை திருப்பியுள்ளனர்.

மாருதி, ஹூண்டாய் உள்ளிட்ட அனைத்து கார் நிறுவனங்களும் தற்போது ஆட்டோமேட்டிக் கார்களை விற்பனை செய்து வருகின்றன. மார்க்கெட் டிரென்ட்டை கருத்தில்கொண்டு தற்போது அனைத்து நிறுவனங்களும் புதிய ஆட்டோமேட்டிக் கார்களை அறிமுகப்படுத்துவதற்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.

குறிப்பாக, மிட்சைஸ் மற்றும் பிரிமியம் செக்மென்ட்டில் ஆட்டோமேட்டிக் கார்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மைலேஜ் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை நிம்மதியான பயணத்தை கொடுக்க வேண்டும் என்று வாடிக்கையாளர் மனநிலை மாறி வருவதே ஆட்டோமேட்டிக் கார்கள் மீதான ஈர்ப்புக்கு காரணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக