திங்கள், 23 ஏப்ரல், 2012

வடிவேலு - சிம்புதேவன் சந்திப்பு: இம்சை அரசன் 23-ம் புலிகேசியின் இரண்டாம் பாகம் தயாராகிறது?

தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத காமெடிப் படங்களில் ஒன்றான இம்சை அரசன் 23-ம் புலிகேசியின் அடுத்த பாகத்துக்கான வேலைகள் ஆரம்பமாகியுள்ளன.
முதல் பாகத்தை இயக்கிய சிம்புதேவன்தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார். இப்போது திரைக்கதை உருவாக்கும் பணியில் அவர் மும்முரமாக உள்ளதாக கூறப்படுகிறது.
அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு எந்தப் படத்திலும் நடிக்காமலிருக்கும் வடிவேலு, தனது புதிய இன்னிங்ஸை இந்தப் படம் மூலம், அதுவும் ஹீரோவாகத் தொடங்க திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தப் படம் குறித்து சிம்புதேவனும் வடிவேலுவும் சந்தித்துப் பேசியதாகவும், இம்சை அரசன் 23-ம் புலிகேசியின் தொடர்ச்சியாக ஒரு படத்தை உருவாக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய தனது பேட்டியிலும் கூட, இத்தனை மாத இடைவெளிக்குப் பிறகு தான் நடிக்கும் நடிக்கும் புதிய படம் அதிரடியாக இருக்கும். ஹீரோவாக நடிக்க பேசிக் கொண்டிருக்கிறேன் என்று கூறியிருந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக