சனி, 17 மார்ச், 2012

Rolls Roys மல்லிகா ஷெராவத்தின் 'பின்புலம்' சரியில்லை

உலகின் மதிப்புமிக்க கார் பிராண்டாக ரோல்ஸ் ராய்ஸ் திகழ்கிறது. அரசப் பரம்பரையினர், பிரபல நட்சத்திரங்கள், பெரும் தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மட்டும்தான் ரோல்ஸ்ராய்ஸ் காரை சொந்தமாக்க முடியும் என்ற நீடிக்கிறது.
இதற்கு பணம் இருந்தால் மட்டும் போதாது, தகுதியும் அதாவது தக்க பின்புலமும் வேண்டும் என்பது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கொள்கையும் ஒரு காரணமாக இருக்கிறது.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கார் வாங்குவதற்கு பணத்தைவிட முக்கியமானது தகுதிதானாம். ஆம், கோடி கோடியாய் பணமிருந்தாலும் தகுதியுடையவர்களுக்கு மட்டுமே காரை விற்பனை செய்வேன் என்று பிடிவாதமாய் தனது பிராண்டு மதிப்பை காப்பாற்றி வருகிறது ரோல்ஸ் ராய்ஸ்.
மேலும், வாடிக்கையாளர்களின் பின்புலத்தை ஆய்வு செய்த பிறகுதான் அவர்களுக்கு கார்களை விற்பனை செய்கிறது பிரிட்டிஷ் பிராண்டான ரோல்ஸ் ராய்ஸ். பின்புலம் இல்லாவிட்டால் கார் கிடையாது என்று பளிச்சென்று மறுத்துவிடுகிறது ரோல்ஸ் ராய்ஸ்.
இதற்கு உதாரணமாய் ஓர் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஆண்டு பாலிவுட் கவர்ச்சி கன்னி மல்லிகா ஷெராவத் ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்குவதற்கு புக்கிங் செய்ய சென்றுள்ளார். வழக்கம்போல் வாடிக்கையாளரின் தகுதி குறித்து அதாவது, அவரது பின்புலத்தை ஆராய்ந்த ரோல்ஸ் ராய்ஸ், உங்களுக்கு நாங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு போதிய பின்புலம் இல்லை என்பதை நாசூக்காக கூறி கார் தர மறுத்துவிட்டதாம்.
பாலிவுட்டில் நான் ரொம்ப பெரிய்ய்ய...! நடிகை என்று அவர் கூறியதையும் அந்த நிறுவனம் ஏற்க மறுத்துவிட்டதாம். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த மல்லிகா நேராக சென்று மெர்சிடிஸ் பென்ஸ் ஆடம்பர கார் ஒன்றை வாங்கிய பிறகே சமாதானம் அடைந்தாராம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக