திங்கள், 26 மார்ச், 2012

Pakistan கட்டாய மதமாற்றம் தடுக்க புதிய சட்டம் கொண்டு வர கோரிக்கை



பாகிஸ்தானில் மதச் சிறுபான்மையினரை கட்டாய மதமாற்றத்தில் இருந்து பாதுகாக்க, வலுவான சட்டம் தேவை என அந்நாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, மதச் சிறுபான்மையினரை பாதுகாப்பது குறித்து, தேசிய நல்லிணக்க அமைச்சர் அக்ரம் மஷிஹ் கில் அளித்த பேட்டியில்,  

‘’இது போன்ற கட்டாய மதமாற்றங்கள், இஸ்லாமிய சட்டங்களுக்கு எதிரானவை. மதச் சிறுபான்மையினரை கட்டாய மதமாற்றத்தில் இருந்து பாதுகாக்க, வலுவான சட்டம் ஒன்று தேவை.

அச்சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன், இஸ்லாமிய மத கவுன்சில் மற்றும் மத்திய ஷரியா கோர்ட் ஆகிய இரு அமைப்புகளும் கட்டாய மதமாற்றம் இஸ்லாத்திற்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும்.

கட்டாய மதமாற்றத்தைக் கண்காணித்து தடுக்கும் வகையில் ஒரு சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என, சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த எம்.பி.,க்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்தகைய சட்டத்தின் முன்வரைவு, ஜூன் மாதத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பின் பார்லிமென்டில் தாக்கல் ஆகலாம்’’என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக