திங்கள், 26 மார்ச், 2012

பாபா ராம்தேவுடன் இணைந்து செயல்படுவேன்: ஹசாரே


ஊழல் புகார்கள் உள்ள அனைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும் என்று அன்னா ஹசாரே கேட்டுக்கொண்டுள்ளார்.
 வலுவான லோக்பால் மசோதா கோரி புது தில்லியில் உள்ள ஜந்தர் மந்தர் மைதானத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் அவர் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில், யோகா குரு பாபா ராம்தேவுடன் இணைந்து செயல்பட போவதாக அறிவித்துள்ளார்.
 மேலும் ஊழல் புகார்கள் உள்ள அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்யத் தவறினால் சிறைநிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அதேசமயம் 2014ம் ஆண்டுக்குள் வலுவான லோக்பால் நிறைவேற்ற வேண்டும் என்றும அவர் கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக