வியாழன், 22 மார்ச், 2012

அணுசக்தி தேவை: கலாம் வலியுறுத்தல்

சென்னை: "அடுத்த பத்தாண்டுகளில், மிகப் பெரிய அணு மின் உற்பத்தி மையமாக கூடங்குளம், உலகில் அடையாளம் காட்டப்படும்' என, முன்னாள் ஜனாதிபதியும், அணு விஞ்ஞானியுமான அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: மின் தேவையில் இந்தியா தன்னிறைவடைவதற்கு, அணு மின் உற்பத்தி தேவை என்று உணர, கூடங்குளம் அனுபவம் ஒரு வாய்ப்பாக அமைந்தது. அணு மின் உற்பத்தி செய்யப்படும் முறை, அணு மின் நிலையங்களின் நம்பகத்தன்மை, அவற்றின் பாதுகாப்பு மட்டுமின்றி, 2030க்குள் மின் உற்பத்தியில் தன்னிறைவடைய அணு மின் சக்தி எவ்வளவு அவசியம் என்பதையும் உணர்ந்துகொள்ள, இந்த அனுபவம் உதவியுள்ளது.
இது தொடர்பாக எழுந்த விவாதங்கள், பொதுமக்களின் மனதைத் தூண்டிவிட்டு, அணு மின் சக்தியின் மூன்று கட்டச் செயல்பாடுகளையும், நிலையான எதிர்காலத்துக்கு அது தேவை என்பதையும் புரிந்துகொள்ள வைத்துள்ளது. அடுத்த பத்தாண்டுகளில், கூடங்குளத்தை மிகப் பெரிய அணு மின் உற்பத்தி மையமாக உலகுக்கு அடையாளம் காட்ட, இந்த அணு மின் திட்டம் பயன்படும். இவ்வாறு கலாம் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக