வியாழன், 22 மார்ச், 2012

Agent Vinod ஏஜென்ட் வினோத்’ திரைப்படம் பாகிஸ்தானில் தடை?

Viruvirupu 
இந்த வாரம் வெளியாகும் ஹிந்தி திரைப்படம் ‘ஏஜென்ட் வினோத்’, பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடைக்கு காரணம், ‘ஏஜென்ட் வினோத்’ திரைப்படத்தில், பாகிஸ்தான் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ., கேலியாகச் சித்தரிக்கப்படுகிறது என்று பாகிஸ்தான் தணிக்கை குழு அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் இந்தியப் படங்களுக்கு 1965 முதல் நிரந்தர தடை இருந்தது. 43 ஆண்டுகளின் பின் 2008-ம் ஆண்டில்தான், நிரந்தர தடை நீக்கப்பட்டு, படத்துக்கு படம் தனித்தனியாக தணிக்கை செய்யும் முறை அமலுக்கு வந்தது.
இதற்குமுன் த டர்ட்டி பிக்சர், டெரே பின் லேடன் ஆகிய படங்கள் சமீபகாலத்தில் பாகிஸ்தான் தணிக்கை குழுவினரால் தடை செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீராம் ராகவனின் இயக்கத்தில் வெளியாகவுள்ள ‘ஏஜென்ட் வினோத்’த்தில் ஐ.எஸ்.ஐ.-யை எப்படி கிண்டலடித்திருக்கிறார்கள் என்பது சரியாக தெரியவில்லை.
ஏஜென்ட் வினோத்தின் ஹீரோயின் பாகிஸ்தான் பெண் காரெக்டரில் நடித்திருப்பவர் கரீனா கபூர் என்பதும் தடைக்கு சொல்லப்படாத ஒரு காரணமாக இருக்கலாம்.ஹாலிவூட் திரைப்படங்களில் சி.ஐ.ஏ., மற்றும் எஃப்.பி.ஐ.-யை கிண்டலடிக்கும் படங்களை அமெரிக்காவில் தடை செய்யத் துவங்கியிருந்தால், எத்தனையே நல்ல படங்கள் பெட்டிக்குள்தான் தூங்கியிருக்க வேண்டும். இந்தியாவில் சி.பி.ஐ. அல்லது றோ-வை கிண்டலடிக்கும் திரைப்படங்கள் தடை செய்யப்பட்டதாக தெரியவில்லை. (தமிழில் அப்படியான படங்கள் வந்தனவா?)
அட, அவ்வளவு தொலைவுக்கு போவானேன்? தமிழில் நம்ம கேப்டன் விஜயகாந்த் ராணுவ அதிகாரியாக நடித்த படங்களையே இந்திய சென்சார் போர்டு தடை செய்யவில்லை. ராணுவ யூனிபார்மில் நம்ம கேப்டன் ‘பறந்து’ அடிப்பதை விட மோசமாக இந்திய ராணுவத்தை யாராவது கிண்டல் செய்துவிட முடியுமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக