வியாழன், 15 மார்ச், 2012

தங்கப்புதையலை கொடுத்து அல்போன்சாவை விடுவித்தார் பெரிய ஹீரோ


விக்னேஷ் ஜோடியாக ஒரு படத்தில் கதா நாயகியாகத்தான் ஒப்பந்தமானார் அல்போன்சா. அந்தப் படத் துக்காக ஸ்விம் சூட் அணிய வைத்து போட்டோ ஷூட் எடுத்தார்கள்.
ஆனால் படம் தொடங்கப்படாமலேயே நின்றுபோனது. ஆனால் அல்போன்சாவின் நீச்சல் உடை படங்கள் சினிமா கம்பெனிகளில் வலம் வந்ததால் அல்போன்சாவின் கதாநாயகி கனவு தகர்ந்து போனது.
ஆனாலும் கவர்ச்சி நாயகி அந்தஸ்து வலிய வந்து சிவப்புக் கம்பளம் விரித்தது. பொருளாதார ரீதியாக இது உதவிகரமாக இருக்கும் என்பதால் கவர்ச்சி நடிகையாக தன் சினிமா என்ட்ரியை ஆரம்பித்தார்.
கிட்டத்தட்ட "அல்போன்சா டான்ஸ் அவசியம்' என்கிற அளவுக்கு எல்லா படங்களிலும் அல்போன்சாவின் ஆட்டம் இடம் பிடித்தது.
அல்போன்சாவின் இடுப்பழகிற்கு பெரிய பெரிய ஹீரோக்களும் கூட ரசிகர்களாக இருந்தார்கள்.
தமிழ் சினிமாவின் பெரிய ஹீரோ ஒருவர் அல்போன்சாவின் அழகில் சொக்கி... அவரை கொஞ்ச நாட்கள் தன்னுடனேயே வைத்துக்கொண்டார். கடைசியில் தங்கப்புதையலை பரிசாகக் கொடுத்து அல்போன்சாவை விடுவித்தார்... என்றும் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.
ஒருநாள்...
வடபழநி போலீஸ் ஸ்டேஷனிலிருந்து "உடனே வாங்க' என அல்போன்சாவுக்கு அழைப்பு.
"போலீஸ்காரங்க எதுக்குக் கூப்பிடுறாங்க?' என குழம்பிப்போன அல்போன்சா, வக்கீலுடன் ஸ்டேஷனில் ஆஜரானார்.
ஒரு இளம்பெண் அழுதபடி உட்கார்ந்திருக்க... "இந்தப் பொண்ண தெரியுமா?' என அல்போன்சாவிடம் இன்ஸ்பெக்டர் கேட்டார்.
"இந்தப் பெண்ணை முன்னப்பின்ன பார்த்ததே இல்லையே' என அல்போன்சா சொல்லிவிட்டு, அந்தப் பெண்ணிடமே "நீ யாரும்மா?' என விசாரித்தார்.
அப்போதுதான் தன் தம்பி காதலித்து ஏமாற்றியதாக அந்தப் பெண் புகார் கொடுத்த விஷயம் அல்போன்சாவுக்குத் தெரியவர...
தன் தம்பியை நாலு பளார் விட்டதோடு... அறிமுகமே இல்லாத அந்தப் பெண்ணுக்கு நியாயம் கிடைக்கப் போராடினார் அல்போன்சா.
இப்படி... ஒரு பெண்ணின் காதலுக்காக போராடினார் அல்போன்சா. ஆனால் அல்போன்சாவின் காதல் அவரை துரத்தித் துரத்தி துயரப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது, அப்போது முதல் இப்போது வரை.
மலையாளத்தில் சில ஏடாகூட படங்களில் நடித்திருக்கும் உஸ்மான் என்பவர் படப்பிடிப்பின் போது அல் போன்சாவை சந்தித்தார். அவர் விரித்த காதல் வலையில் அல்போன்சா விழுந்தார்.
"ஏவி.எம்.மில் ஷூட் டிங் இருக்கு' எனச் சொல்லிவிட்டு ஒருநாள் காதலருடன் ஊர் சுற்றக் கிளம்பிவிட்டார் அல்போன்சா.
அவசரமாக மகளை சந்திக்க ஸ்டுடி யோவுக்கு வந்த அம்மா வுக்கு மகளின் காதல் விஷயம் எட் டவே...
வீட்டில் பஞ்சாயத்து. காதலை கைவிடும்படி அம்மா அழுது பார்த்தார், அடித்து உதைத்துப் பார்த்தார். ஆனால் "சினிமா வேண்டாம், கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டி லாகப்போறேன்' எனச் சொன்னார் அல்போன்சா.
அம்மா சம்மதிக்காததால் தூக்க மாத்திரைகளைப் போட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். ஆஸ்பத் திரிக்குத் தூக்கிக்கொண்டு போய் காப்பாற்றிவிட்டார்கள்.
"அவன் ஏற்கனவே கல்யாண மானவன், குழந்தைகள் இருக்கு' என அம்மா சொன்னபோது அதிர்ச்சியாகி விட்டார் அல் போன்சா.
விசாரித்துப் பார்த்ததில் "அது உண் மை' என தெரியவந் தாலும்கூட... காதலனை மறக்க மறுத்து விட்டார் அல்போன்சா.
அம் மாவுக்குத் தெரியாமல் காதலருடன் ஓடிப்போக திட்டமிட்டார்.
அந்தச் சமயம் ஐதராபாத்தில் ஒரு தெலுங்குப் படப் பிடிப்பு. நாலாவது நாள் ஷூட்டிங் முடிஞ் சதும் காதலனுடன் கம்பி நீட்ட திட்டமிட்டிருந் தார். ஆனால் மகளின் திட் டத்தை மோப்பம் பிடித்தார் அம்மா.
நாலாவது நாள் காலை. தன் அறைக்கதவு தட்டப்பட... திறந்தார் அல்போன்சா. அம்மா நின்றிருந்தார். ஷூட்டிங் முடிந்ததும் அம்மாவுட னேயே சென்னை திரும்பினார்.
அடுத்த நாள் மாலை பேப்பர்களில் அனல் பறந்தது அந்தச் செய்தி.
"நடிகை தேவயானி வீட்டை விட்டு தப்பித்துப்போய் டைரக்டர் இராஜகுமாரனை திருமணம் செய்துகொண்டார்.' இந்தச் செய்தி யைப் படித்துவிட்டு உற்சாகமாகச் சீட்டியடித் தார் அல்போன்சா. தேவயானி ஸ்டைலில் வீட் டிலிருந்து எஸ்கேப் ஆக திட்டம் போட்டனர்.
இரவில் துணிமணிகளையும், பத்து பவுன் நகையையும் எடுத்து வைத்துவிட்டு "எல்லோரும் அசரும் நேரமான' அதிகாலைக் காக காத்திருந்தார். அதன்படி பேக்கை மாட்டிக் கொண்டு வெளியே வந்தார். கேட்டில் பெரிய பூட்டு. திரும்ப வீட்டுக்குள் போய் சாவி எடுக்கலாமா? என அல்போன்சா நினைத்து ஒரு ஸ்டெப் வைக்க... "நில்லு...' என கத்திக் கொண்டு தம்பி ஓடிவர... அசட்டுத் துணிச்சலில் கேட்டில் ஏறிக் குதித்தார். தெருவில் ஓட... தம்பி துரத்த... தெருமுனையில் காதலர் காரை ஸ்டார்ட் செய்த நிலையில் வைத்திருக்க... ஓடிப்போய் காரில் ஏறி எஸ்கேப் ஆனார்.
ஆழ்வார்பேட்டையில் உள்ள காதலரின் நண்பர் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அந்த வீட்டில் இருந்த லேண்ட்லைன் மூலம் தன் அம்மாவுக்கு போன் போட்ட அல்போன் சா, "ப்ளீஸ்மா... என்னைத் தேட வேணாம்' எனச் சொல்லி லைனை துண்டித்தார்.
"லூசு... ஒங்க வீட்டு போன்ல காலர் ஐ.டி. இருக்கு. இந்த நம்பரை கண்டுபுடிச்சு வந்துடமாட்டாங்களா?' என காதலர் கத்த... அவசர அவசரமாக ராயப்பேட்டையிலுள்ள நண்பர் வீட்டுக்கு மாறினார்கள். பணம் ஏற்பாடு செய்வதற்காக வெளியே போய்விட்டு வருவதாகச் சொல்லிக் கிளம்பிய காதலர், கொஞ்ச நேரத்தில் சோகமாக திரும்பி வந்தார்.

""இப்ப சூழ்நிலை சரியில்ல. அதனால நீ ஒன்னோட வீட்டுக்குப் போயிடு. இன்னும் கொஞ்சநாள் கழிச்சு நாம சேர்ந்துக்கலாம்'' என்றார். அதிர்ச்சியில் உறைந்துபோனார் அல்போன்சா.
thanks nakkeeran+shankar delhi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக