புதன், 21 மார்ச், 2012

வித்யாபாலனுக்கு பதிலாக சினேகா!

இந்தியில் வித்யாபாலன் நடித்து வெற்றி பெற்றுள்ள படம் “கஹானி”. தமிழில் ரீமேக் ஆகவிருக்கும் இந்த படத்தில் சினேகாவை நடிக்க வைக்கும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறதாம்.
பிரசன்னாவுடன் மே 11-ம் தேதி திருமணம் நடக்கவிருக்கும் நேரத்தில் சினேகா ஏற்கனவே ஹரிதாஸ் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கஹானி படத்தில் வித்யாபாலன் காணாமல் போன கணவனைத் தேடிக் கண்டுபிடிக்க கொல்கத்தா செல்லும் பெண்ணாக நடித்திருப்பார். 
இந்த கதை முழுவதும் கதாநாயகியை சார்ந்தே இருக்கும் கதை. கதாநாயகிக்கு மட்டும் இருக்கும் கதை என்று தான் சினேகா பவானி படத்தை தேர்ந்தெடுத்தார். ஆனால் அந்த படம் தோல்வியடைந்தது.புறம் திருமணம், ஒரு புறம் படம், ஒரு புறம் முந்தையத் தோல்வி என இருக்க இந்த படத்தில் சினேகா நடிப்பாரா?என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக