வெள்ளி, 30 மார்ச், 2012

பாரதிராஜா படத்தில் மேலும் குழப்பம்!அமிருக்கு பதிலாக மகன் மனோஜ் கே பாரதி.


பாரதிராஜா தனது கனவுப் படமாக அறிவித்து, தனது சொந்த ஊரிலேயே படப்பிடிப்பையும் ஆரம்பித்தது அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தை தான். ஹீரோவாக நடிக்க முதலில் நடிகர் பார்த்திபன் அழைக்கப்பட்டு அதன் பின் அவர் சரிவராமல் இயக்குனர் அமிரை வைத்து படப்பிடிப்பை ஆரம்பித்தார் பாரதிராஜா. 
கேரளாவுடன் முல்லை பெரியாறு பிரச்சனை எழுந்த போது தனது படத்தில் நடித்த கேரள நடிகைகளான கார்த்திகா, இனியா ஆகியோரை வீட்டுக்கு அனுப்பி வைத்தது போல், ஃபெப்சி தொழிலாளர்களுடன் ஏற்பட்ட சம்பளம் தொடர்பான மோதலினால் படத்தின் ஹீரோவான அமிரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டார் பாரதிராஜா.(தொழிலாளர்களுடன் ஏற்பட்ட பிரச்சனைக்கும் அமீரை நீக்கியதற்கும் என்ன சம்பந்தம்?) தயாரிப்பாளார்களுடன் ஏற்பட்ட மோதலின் போது தங்களுக்கு நியாயத்தை பெற்றுத் தரக்கோரி ஃபெப்சி தொழிலாளர்கள் போய் நின்றது அமிரிடம் தான். அதன் பின் அவரையே பேச்சுவார்த்தைக் குழுத் தலைவராக அறிவித்தனர். 

பாரதிராஜாவிற்கு எதிர் கூட்டணியில் இருந்ததால் பேச்சுவார்த்தையின் போது காரசாரமாக பேசியதற்கு பலன் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் கொடிகளை வளைக்க மற்றொரு கொடிவீரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். படத்திலிருந்து அமீர் நீக்கப்பட்டார் என்ற செய்தி வெளிவந்ததும் பாரதிராஜா அதை மறுத்து அமீருக்கு ஒருமுறை வாய்ப்பளித்தார்.&இருந்தாலும் அமீர் தொடர்ந்து ஃபெப்சி தொழிலாளர்களுக்கு ஆதராவாக பேசிக்கொண்டிருந்ததால் அமீர் நீக்கப்பட்டதை இப்பொழுது பாரதிராஜாவே உறுதிபடுத்திவிட்டதாக தெரிகிறது. படத்தில் அமீருக்கு பதிலாக நடிப்பது பாரதிராஜாவின் மகன் மனோஜ் கே பாரதி. கொடிவீரன் கேரக்டரில் இனியாவுடன் இணைந்து நடிக்கப்போவது மனோஜ். கார்த்திகாவும்,இனியாவும் எப்போதோ கேரளா ரிட்டர்ன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக