வெள்ளி, 30 மார்ச், 2012

ராமஜெயம் இறுதி ஊர்வலத்தில் மு.க.அழகிரி, டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் பங்கேற்பு

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் 29.03.2012) அதிகாலை நடைப்பயிற்சி சென்றபோது மர்ம நபர்களால் கடத்தி படுகொலை செய்யப்பட்டார்.
ராமஜெயத்தின் உடல் இறுதிச் சடங்கிற்காக இன்று (30.03.2012) காலை 10 மணிக்கு தில்லைநகரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டது. திருச்சி காவிரி கரையில் உள்ள ஒயாமாரி சுடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது.
இறுதி ஊர்வலத்தில் டி.ஆர்.பாலு, அழகிரி, தயாநிதி மாறன், முல்லைவேந்தன், கி.வீரமணி, நெப்போலியன், திருச்சி சிவா ஆகியோர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக