செவ்வாய், 20 மார்ச், 2012

கீச் கீச்' உலக சிட்டுக்குருவி நாள்

சென்னை, உலக சிட்டுக்குருவி நாள் நாள்(செவ்வாய்க் கிழமை) கொண்டாடப் படுகிறது. இதையொட்டி சென்னையில் சிட்டுக் குருவிகளைக்கணக் கெடுக்க இயற்கை ஆர் வலர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
`கீச் கீச்' என்ற இனி மையான குரல். எப் போது பார்த்தாலும் உற் சாக துள்ளல். சாந்தமான, அதே நேரம் எச்சரிக்கை மிகுந்த பார்வை. மகிழ்ச்சி மற்றும் வளர்ச்சியின் அடையாளமாக கருதப் படுவது. இவை அனைத் திற்கும் சொந்தமாக இருப் பவை சிட்டுக் குருவிகள் தான். அவற்றை பார்ப்ப தும், கீச் குரலைக்கேட்டு ரசிப்பதும், மனத்திற்கு ரம்மியமாக இருக்கும்.
கிராமங்களில் ஒவ் வொருவீட்டிலும் வாடகை இல்லாமல் குடித்தனம் நடத்தி வந்த இந்த குருவிகளை தேடிப் பிடித்துத்தான் கண்டு பிடிக்க வேண்டியுள்ளது. ஓட்டு வீடுகள் அனைத் தும் கான்கிரீட் வீடுகளாக மாறி வருவதும், தூண் களே இல்லாமல் வீடு களும், கட்டடங்களும் உருவாக்கப்படுவதும், மரங்கள் வெட்டப்பட்டு வருவதும் சிட்டுக்குருவி கள் அருகி வருவதற்கு காரணங்கள்.
இவற்றுக்கு எல்லாம் மேலாக சிட்டுக்குருவி களுக்கு உயிரை வாங்கு பவையாக இருப்பவை ஆங்காங்கே கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் செல் போன் டவர்கள்தான். இதில் இருந்து வரும் கதிர்வீச்சுகள்தான் சிட்டுக்குருவிகளின் அழி வுக்கு முக்கிய காரணமாக சொல்கிறார்கள். செல் போன் டவர்கள் அமைந் துள்ள இடங்களிலும், அதைச்சுற்றியுள்ள பகுதி களில் ஒரு சிட்டுக்குருவி கூட தென்படுவதில்லை. அபாயம் நிறைந்த கதிர் வீச்சுகளால் சிட்டுக்குருவி கள் வானில் பறந்து கொண்டிருக்கும்போதே செத்து மடிகின்றன. கதிர் வீச்சினால் அவற்றின் இனப்பெருக்கம் பெரு மளவு பாதிப்புக்குள்ளா கிறது. அழிந்து வரும் பறவையான சிட்டுக் குருவிகளை பாதுகாப் பது குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் நோக்கில்   மாதம் 20ஆம் தேதி உலக சிட்டுக்குருவி தினமாக கொண்டா டப்படுகிறது. அந்த வகையில், சிட்டுக் குருவி தினத்தை யொட்டி சென் னையில் சிட்டுக் குருவி களை கணக்கெடுக்க சென்னை இயற்கை ஆர்வலர்கள் சங்கம் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக