ஞாயிறு, 18 மார்ச், 2012

திருப்பதியில் இன்று தேவஸ்தான அலுவலகத்தில் பணியாளர் கொலை

திருமலை, மார்ச் 17- திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தான அலுவலகம் கீழ்திருப்பதியில் இயங்கி வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
கணக்கு பிரிவில் பணிபுரியும் மல்லிகார்ஜூனா (வயது35) இன்று காலை வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு வந்தார். அலுவலகத்துக்குள் நுழைந்தபோது 4 பேர் கும்பல் அவரை வழிமறித்தனர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் கும்பல் அவரை சரமாரியாக வெட்டி சாய்த்தது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் பிணமானார். இதை பார்த்து அங்கு இருந்த ஊழியர்கள் அலறியடித்து கொண்டு ஓடினார்.
தனால் தேவஸ்தான அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் திருப்பதி காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மல்லிகார்ஜூனாவின் பிணத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடைபெற்று வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக