ஞாயிறு, 25 மார்ச், 2012

மக்கள் நலப்பணியாளர் தற்கொலை!


மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டும், பணிகளை வழங்காத தமிழக அரசை எதிர்த்து வேலூரில் மக்கள் நலப்பணியாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பணியாளர்களுக்கிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் பலநாட்களாக ஆகியும் தமிழக அரசு நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததால் ஆயிரக்கணக்கான மக்கள் நலப்பணியாளர்கள் ஏழ்மையில் சிக்கி தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வேலூர் மாவட்டம் ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்ற மக்கள் நலப்பணியாளர் தமிழக அரசின் நடவடிக்கையால் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகி விஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக