திங்கள், 26 மார்ச், 2012

மிடாஸ் மோகன் ஏன் கைது? இவர் ‘தட்டியது’ யாரை?

Viruvirupu, சின்டிகேட்டின் மற்றொரு முக்கிய புள்ளி மிடாஸ் மோகன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை சாஸ்திரி நகர் போலீஸார் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மிடாஸ் மோகனைக் கைது செய்தனர். பண மோசடி புகாரில் அவர் கைதாகியுள்ளாராம். அதுவும் ஒரு காரணம் என்று சொல்லலாமே தவிர, அதுதான் காரணம் என்று டிடித்துச் சொல்ல முடியாது.சசிகலா குடும்பத்திற்கு ‘ரொம்பவும் வேண்டப்பட்ட’ ஆட்களால் வெற்றிகரமாக நடத்தப்பட்டு பணத்தை வாரிக் கொட்டிய மிடாஸ் நிறுவனம், இப்போது பழைய சுறுசுறுப்பில் இல்லை. இந்த நிறுவனத்தின் ஓனர்ஷிப் பற்றி பேசினால், தலை சுற்றும். அந்த அளவுக்கு, பேப்பரில் ஒரு பெயர், நிஜத்தில் ஒரு ஆள், கன்ட்ரோல் பண்ணுவது ஒருவர், ஹேன்டில் பண்ணுவது ஒருவர் என்று மாயக் குகை இது.
மிடாஸ் நிறுவனத்துக்கும், ‘மிடாஸ்’ மோகனுக்கும் என்ன தொடர்பு? இவரையும், நிறுவனத்தையும் கனெக்ட் பண்ணலாம் என்று ஆதாரங்களைத் தேடினால் கண்டிப்பாக கிடைக்காது. ஆனால், இவரது பெயரில் மட்டும் மிடாஸ் உள்ளது.
தற்போது மோகனுக்கு எதிராக பதிவாகியுள்ள குற்றச்சாட்டின்படி, அரி துளசிராமன் என்பவரிடம் பண மோசடி செய்துள்ளார். அத்துடன், லேசாக மிரட்டவும் செய்திருக்கிறார். அரி துளசிராமனுக்கு இந்த விஷயம் இப்போதுதான் உறைக்கவே, சரசரவென்று புகார் எழுதிக் கொடுத்து விட்டார்.
இந்த அரி துளசிராமன், வேலூரை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி. வேலூர் மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட விண்ணப்பித்து இருந்தார். இதற்காக, மிடாஸ் மோகனை சந்தித்தார். “மேயர் சீட் வேண்டுமத? ரூ.50 லட்சம் கொடுத்தால் மேயர் சீட் வாங்கித் தருவேன்” என்று மோகன் கூறியிருக்கிறார். உடனே இவரும், பெசன்ட் நகரில் உள்ள மோகன் வீட்டில் வைத்து 50 லட்ச ரூபாயை கொடுத்துள்ளார்.
மேயர் சீட்டுக்கு பணம் கொடுப்பதும், அதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு புகாரில் எழுதிக் கொடுப்பதும், தமிழகத்தில் குற்றம் அல்ல.
பணத்தை பெற்றுக்கொண்ட மோகன், மேயர் சீட் வாங்கிக் கொடுக்கவில்லை. பணத்தை திரும்ப கேட்டபோது துளசிராமனை அடித்து உதைத்து, “நான் யார் தெரியுமா? என் பவர் என்ன தெரியுமா?” என்று ‘மிரட்டி’ அனுப்பி விட்டாராம். இவர் யார், இவரது பவர் என்ன என்று தெரியாமலா, அவர் பணம் கொடுத்திருப்பார்?
எப்படியோ, மிடாஸ் மோகனை தூக்கி உள்ளே போட்டாகி விட்டது.
‘அடையார்’ மோகன் என்று அறியப்பட்ட இந்த மிடாஸ் மோகன், ஒரு வெளிப்படையான நபர் அல்ல. எந்த ஒரு விவகாரமானாலும், திரைமறைவில்தான் இயங்குவார். ஒரு விதத்தில் பார்த்தால், இவர் சசிகலாவின் உறவினரே இல்லை. மன்னார்குடியைச் சேர்ந்தவர் என்பது உண்மைதான், ஆனால் வேறு ஒரு சமுதாயத்தவர்.
சசிகலா சகாப்தத்தில் பவருடன் இருந்தவர். அப்போது மிடாஸ் நிறுவனம் மட்டுமல்ல, தென் சென்னையில் சுமார் 50 பார்கள் இவரது ஓவரால் கன்ட்ரோலில்தான் நடந்தன. மிடாஸ் நிறுவனத்தின் லிக்கர் டிஸ்ட்ரிபியூஷன் விவகாரம் முழுதும் தெரிந்தவர். வரும் பணம் யாருடைய பாக்கெட்டுக்குள் போகிறது என்ற ரூட் முழுவதையும் நன்றாக தெரிந்தவர்.
இப்போது, இவரது கைதின் பின்னணியில், நம்ம அரி துளசிராமனை தட்டிக் கொடுத்த விவகாரம் மட்டும் இல்லை என்பது உங்களுக்கு புரிந்திருக்கும். மேலதிக விபரங்கள் உள்ளன. உறுதி செய்துகொண்டிருக்கிறோம். Please Stay On Board..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக