திங்கள், 12 மார்ச், 2012

பெண்களே, மதம் உங்களை நம்பித்தானிருக்கிறது

பெண்களே திரைப்படங்களும் உங்களை நம்பியே இருக்கின்றன

  • பெண்களே அரசியல்வாதியும் உங்களை நம்பித்தான் இருக்கிறார்கள்

  • முதலில் விழிப்புணர்வு தேவை பெண்களிடத்தில்தான்!


  • தஞ்சையில் நேற்று அன்னை மணியம்மையார் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் அன்னை மணியம்மையார் உருவப் படத்தினைத் திறந்து வைத்து  உரை
    தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகள், வெற்றிப் பட்டியல்களைக் கேட்டு ஆந்திர மாநிலப் பொது மக்களும் - ஏன் - அமைச்சர்களும்கூட மிகவும் ஆச்சரி யப்பட்டார்கள். தந்தை பெரியார் அவர்களைப் பற்றியும் அவர்தம் கொள்கைகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.
    தந்தை பெரியாரின் கருத்துக்கள் வீதியில் பேசப் பட்டாலும் அவரின் களம் என்பது மனித மூளைதான்! அங்குதான் தன் யுத்தத்தை நடத்தினார் தந்தை பெரியார்.

    அய்.நா. மன்றம் அளித்த விருது
    அமெரிக்காவின் அய்.நா. மன்றம் தந்தை பெரி யாருக்கு விருது வழங்கிப் பாராட்டிப் பெருமை செய்தது. சிகாகோவைத் தலைமையிடமாகக் கொண்டு பெரியார் பன்னாட்டு மய்யம் செயல்பட்டுக் கொண்டு வருகிறது.
    சீனாவின் வானொலியில் பெரியாரைப்பற்றிக் கேள்வி பதில்கள்.
    1938ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு கூட்டி பெரியார் என்ற பட்டத்தைக் கொடுத்தனர் தொலைநோக்கோடு.
    அந்தத் தொலைநோக்குத் தலைவரை 95 ஆண்டு காலம் வாழ வைத்த தாய் தான் நமது அன்னையார்.
    அந்த அன்னையாருக்குத்தான் இன்று விழா எடுத்துக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம் - ஏன் மாநாடே நடத்திக் கொண்டு இருக்கிறோம்.
    பெண்கள் சிறை போக வேண்டும்
    13.11.1938இல் சென்னையில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் தந்தை பெரியார் ஒன்றைக் குறிப்பிட்டார். தந்தை பெரியார் அவர்களின் சிந்தனை எத்தகைய தனித் தன்மையானது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
    இன்று 400 பேர் சிறை சென்றதைப் பாராட்டி நீங்கள் (பெண்கள்) தீர்மானம் நிறைவேற்றியபோது, உண்மையிலேயே எனக்குப் பரிகாசமாயிருந்தது. ஆண்கள் சிறை செல்வதில் அதிசயம் ஒன்றும் இல்லையே! பெண்களாகிய நீங்கள் 400 பேர் சிறை சென்று அதை ஆண்கள் அல்லவா பாராட்ட வேண்டும்? நீங்கள் ஏன் சிறை செல்லக் கூடாது? என்று தந்தை பெரியார் பேசி யதை இந்த மாநாட்டில் எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.
    சீனாவிலும்..
    பெண்கள் என்றால் ஆணுக்கு அடிமை, ஆணைவிட மட்டமானவர்கள் என்ற எண்ணம் இங்கு மட்டுமல்ல - உலகிலும் உண்டு. இன்றுகூட ஒரு செய்தி. சீனாவில் குழந்தைகளை விற்பது அதிகரித்து வருகிறது. ஆண் குழந்தை என்றால் இரண்டரை லட்சம் ரூபாய், பெண் குழந்தை என்றால் ஒன்றரை லட்சம் ரூபாயாம்.
    விலைக்கு விற்பதில் ஆண் குழந்தை, பெண் குழந்தை என்ற வேறுபாடு இருக்கிறது.
    பெண்கள் சுதந்திரம் என்று வரும்போது ஆண்கள் கொடுத்து நீங்கள் பெற்றுக் கொள்ள முடியாது. உங்கள் சுதந்திரத்தை நீங்களே எடுத்துக் கொள்ள வேண்டும் - அதற்குத்தான் இத்தகைய மாநாடுகள் பயன்பட வேண்டும்.
    சுக்கா மிளகா சுதந்திரம்?
    சுக்காமிளகா சுதந்திரம் கிளியே
    நம் பெண்கள் அந்த உணர்வைப் பெற வேண்டும். அன்னை மணியம்மையார் அவர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர் - தூற்றப்பட்டவர் அவற்றை அவர்கள் தாங்கிக் கொண்டார்கள் - தந்தை பெரியாரால் பக்குவப்படுத்தப்பட்டார்கள்.
    அன்னையாரின் பெருந்தன்மை!
    அய்யா அவர்கள் மறைந்து விட்டார்கள். ஈரோட்டில் தந்தை பெரியார் இல்லத்தை அய்யா பெயரில் நினைவு இல்லமாக அரசு சார்பில் அமைக்க அன்றைய முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் விரும்பினார்கள். அதற்கான விலையையும்கூட அரசு அளிக்க முன்வந்தது ஆனால் அம்மா அவர்கள் அதனை ஏற்றுக் கொள்ள வில்லை. எங்கள் அறக்கட்டளைக் கூட்டத்தில் தீர்மானம் போட்டு, இலவசமாகவே அய்யா இல்லம் அரசிடம் அளிக்கப்படும் என்றார்கள். அதோடு மட்டுமல்ல; அந்த இல்லத்தில் அண்ணா அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் - விடுதலை ஆசிரியராகப் பணி புரிந்து இருக்கிறார்கள். எனவே அய்யா பெயரோடு அண்ணாவின் பெயரையும் இணைத்து அய்யா அண்ணா இல்லம் என்று அரசு சார்பில் பெயர் சூட்ட வேண்டும் என்ற தம் விருப்பத்தையும் தெரிவித்தார். மிகப் பெரிய பெருந்தன்மையோடு அன்னை மணியம்மையார் அவர்கள். (பலத்த கரவொலி!)
    முக்கிய கருத்தும் - வேண்டுகோளும்
    இந்த மாநாட்டில் எனது முக்கியமான கருத்தும் - வேண்டுகோளும் பெண்களே, மதம் உங்களை நம்பித்தான் இருக்கிறது. திரைப்படங்களும் உங்களை நம்பித்தான் உயிர் வாழ்கின்றன அரசியல் கட்சிகளும் உங்களை நம்பித்தான் இருக்கின்றன.
    இவற்றில் மாறுதல் நிகழ வேண்டுமானால், முதலில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தப்பட வேண்டியது உங்களிடத்தில் தான் - பெண்களிடத்தில்தான்.
    இந்த மாநாடு இந்த வழியில் சிந்திக்கட்டும்! கிராமங் களுக்குச் செல்லுங்கள் - கருத்து வங்கிகளை நடத்துங்கள் வழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
    வாழ்வியல் மய்யம்
    வாழ்வியல் மய்யம் ஒன்று ஏற்படுத்தப்படும் அதில் நீதித்துறையைச் சேர்ந்தவர்கள், மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் இடம் பெறுவார்கள் என்று குறிப்பிட்டார்.
    (தஞ்சையில் 10.3.2012 அன்று அன்னை மணியம்மையார் 92வது பிறந்தநாள் மாநாட்டில் பார்வையாளர் வரிசையில் கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை, கழக பொதுச் செயலாளர் சு. அறிவுக்கரசு, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன தலைவர் பொத்தனூர் க. சண்முகம் மற்றும் பலர் பார்வையாளர் வரிசையில்)
    மகளிரணி சார்பில் விடுதலைக்கு வைப்பு நிதி
    அன்னை மணியம்மையார் 92ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மகளிர் மாநாட்டில் விடுதலை வைப்பு நிதியாக மகளி ரணி - மகளிர் பாசறை சார்பில் ரூ.92 ஆயிரம் அளிக்கப்படும் என்றும் முதல் தவணையாக ரூ.24,500 அளிப்ப தாகவும் தலைமைச் செயற்குழு உறுப்பினர் க. பார்வதி அறிவித்தார்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக