சனி, 17 மார்ச், 2012

Actor ரித்தீஷ் எம்.பி.யை தேடி போலீசார் கேரளா விரைந்தனர்


தி.மு.க. ஒன்றிய செயலாளர் கடத்தல் வழக்கில் ரித்தீஷ் எம்.பி.யை தேடி போலீசார் கேரளா விரைந்தனர். இதுதொடர்பாக 20 இடங்களில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் கதிரவன் கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாக ரித்தீஷ் எம்.பி. உள்பட 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் ரித்தீஷ் எம்.பி. உள்ளிட்டோரை தேடிவந்தனர்.
ரித்தீஷ் எம்.பி.யின் சொந்த ஊரான மணக்குடி கிராமத்திலும், ராமநாதபுரம் சேதுபதி நகரில் உள்ள அவரின் அடுக்குமாடி வீட்டிலும் போலீசார் நேற்று காலை அதிரடி சோதனை நடத்தினர்.

அவரது தந்தை குழந்தைவேலுவிடமும் விசாரணை நடத்தப்பட்டது.இதுதவிர ராமநாதபுரம் முன்னாள் நகரசபை கவுன்சிலர் நாகநாதசேதுபதி, ரித்தீஷ் எம்.பி.யின் உதவியாளர் சிவககை மாவட்டம் குமாரகுறிச்சி நாகராஜன் ஆகியோர் வீடுகள் உள்பட 20 இடங்களில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி விசாரணை நடத்தினர்.
இதேபோல் மற்றொரு தனிப்படையினர் ரித்தீஷ் எம்.பி.யை தேடி கேரளாவுக்குச் சென்றுள்ளனர். இந்த தகவலை தனிப்படை போலீசார் தெரிவித்தனர்<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக