சனி, 17 மார்ச், 2012

ஒரே வீட்டில் 3 சிறுவர்கள் மர்ம மரணம்

குஜராத் மாநில ராஜ்காட் மாவட்டத்தின் ஜாஸ்டான் பகுதியில் வசிக்கும் கானா புரியா, டோய்னா தம்பதிக்கு 3 குழந்தைகள் இருந்தனர். இவர்கள் குடும்பத்துடன் வசிப்பதற்கு இவர்களுடைய முதலாளியின் பண்ணையில் ஒரு அறை ஒதுக்கப்பட்டிருந்தது.
நேற்று மதியம் குழந்தைகளை வீட்டில் விட்டு விட்டு வேலைக்கு சென்றனர். வேலை முடிந்து திரும்ப வந்து பார்த்தபோது ராதா(7), ரிங்கு(4) மற்றும் சஞ்சய்(9) மூன்று குழந்தைகளும் இறந்து கிடந்தனர். இவர்கள் விஷம் அருந்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது முடிந்தபிறகே உண்மையான காரணம் தெரிய வரும் என இந்த வழக்கை விசாரிக்கும் அப்பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் வி.என். பாட்டீல் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக