சனி, 17 மார்ச், 2012

சங்கரன்கோவிலில் :242 வாக்குச்சாவடிகளும் கேமரா

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,   ‘’சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 18-ந் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற இருக்கிறது.
இந்திய தேர்தல் கமிஷனின் உத்தரவையடுத்து சங்கரன்கோவிலில் பறக்கும் படைகள், கண்காணிப்பு குழுக்கள், வீடியோ படக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் 24 மணி நேரமும் தொகுதியை சுற்றி வந்து கண்காணிப்பார்கள்.
சங்கரன்கோவில் தொகுதியில் அமைந்துள்ள 242 வாக்குச்சாவடிகளிலும் உள்ள வீடியோ படப்பிடிப்பு மற்றும் `வெப் காஸ்டிங்' மூலம் திருநெல்வேலியில் இருந்தபடி மாவட்ட தேர்தல் அதிகாரி, தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் இருந்தும் கண்காணித்து கொண்டிருப்பார்கள்.
அங்கு நியாயமாகவும், நேர்மையுடனும் தேர்தல் நடத்துவதற்கு பந்தோபஸ்து பணிக்காக மத்திய ஆயுதப்படை போலீசார் 6 கம்பெனிகள் வந்துள்ளனர்.
இத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை இந்தப் படையின் ஒரு கம்பெனி இங்கு தங்கியிருக்கும்’’என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக