செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

TATA:2 ஜி லைசென்ஸ் ரத்து: நாங்களும் கோர்ட்டுக்கு போறோம்!


2 ஜி லைசென்ஸ் ரத்தை எதிர்த்து நீதிமன்றத்துக்கு செல்லப் போவதாக டாடா நிறுவனம் அறிவித்துள்ளது.
சமீபத்தில் உச்சநீதிமன்ற உத்தரவால் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் ரத்து நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்ட நிறுவனங்களுள் டாடா டெலிசர்வீஸசும் அடங்கும்.
இதைத் தொடர்ந்து தங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து டாடா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்கள் நிறுவனம் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் கோரி, கடந்த 2006-ம் ஆண்டு ஜுன் மாதமே விண்ணப்பித்தது.
அது 18 மாதங்களாக நிலுவையில் இருந்த பிறகு, 2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் லைசென்ஸ் வழங்கப்பட்டது. இதை சுட்டிக்காட்டி, உச்சநீதிமன்றத்தில் நிவாரணம் தேடுவோம். இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு உச்சநீதிமன்றத்தில் மனு செய்யவுள்ளோம்.
ஸ்பெக்ட்ரம் லைசென்சுகளை ஏல முறையில் விற்பதை வரவேற்கிறோம்," என்று கூறியுள்ளது.
2 ஜி முறைகேடு தொடர்பாக டாடா டெலிசர்வீஸசசின் 3 லைசென்ஸ்களை ரத்து செய்துள்ளது உச்சநீதிமன்றம். ஏற்கெனவே இந்த நிறுவனம் 17 லைசென்ஸ்களுடன் இயங்கி வருகிறது.
உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஏற்கெனவே யூனிநார் நிறுவனம் மேல் முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக