சனி, 11 பிப்ரவரி, 2012

Ex DMKஅமைச்சர் மிக்ஸி, கிரைண்டர் வாங்கியது எப்படி: லஞ்சஒழிப்பு போலீசார் விசாரணை

திமுக உறுப்பினர்கள் டூத் பிரஷ் வாங்க காசு எப்படி கிடைத்தது என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் கிடுக்கி பிடி. அதிமுக அரசின் அதிரடி சோதனை மேலும் பல முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் வருமானத்திற்கு அதிகமாக  பல் பொடி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது
ஊமச்சிக்குளம்: மதுரையில், தி.மு.க., மாஜி அமைச்சர் தமிழரசி வீட்டில், நேற்று சோதனை நடத்திய லஞ்சஒழிப்பு போலீசார், "மிக்ஸி, கிரைண்டர் வாங்க பணம் எப்படி வந்தது?' என விசாரித்தனர்.
கடந்தாட்சியில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் தமிழரசி. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்சஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று காலை 6.40 மணிக்கு, மதுரை அய்யர்பங்களா - மூன்றுமாவடி ரோட்டில் உள்ள தமிழரசி வீட்டிற்கு, நெல்லை லஞ்சஒழிப்பு டி.எஸ்.பி., தங்கச்சாமி தலைமையில் 7 பேர் சோதனையிட வந்தனர். அப்போது தமிழரசியும், கணவர் ரவிக்குமாரும் இருந்தனர். சமையலறை உட்பட அனைத்து அறைகளையும் போலீசார் சோதனையிட்டனர். கம்ப்யூட்டரில் பதிவான விபரங்களை ஆய்வு செய்தனர். வீட்டில் இருந்த மிக்ஸி, கிரைண்டர் குறித்து கேள்வி எழுப்பிய டி.எஸ்.பி., தங்கச்சாமி, "இப்பொருட்களை எல்லாம் வாங்க பணம் எப்படி வந்தது?' எனக்கேட்டார். காலை 10.15 மணிக்கு சோதனையை முடித்துக் கொண்டு வெளியே வந்த தங்கச்சாமி கூறுகையில், ""வங்கி கணக்குகள் மற்றும் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து ஆவணங்களை கைப்பற்றியுள்ளோம்,'' என்றார்


தமிழரசி கூறியதாவது: "நான் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கவில்லை. அதனால் சோதனையிட எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை' என்று போலீசாரிடம் கூறினேன். அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. மிக்ஸி, கிரைண்டர் வாங்கிய பில்களை மட்டும் எடுத்துச் சென்றனர். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இச்சோதனை நடத்தப்பட்டுள்ளது, என்றார்.

நெல்லை போலீஸ் வந்தது ஏன்? உள்ளூரில் லஞ்சஒழிப்பு சோதனையை அம்மாவட்ட போலீசாரே மேற்கொள்வது வழக்கம். ஆனால் நேற்று மதுரையில் நெல்லை டி.எஸ்.பி., தங்கச்சாமி சோதனை மேற்கொண்டார். இதுகுறித்து மதுரை லஞ்சஒழிப்பு போலீசிடம் கேட்டபோது, ""எங்கு, யார் சோதனைக்கு செல்ல வேண்டும் என்பது உயர்அதிகாரிகளின் முடிவு. தேவையற்ற சர்ச்சைகள் ஏற்படாமல் இருக்க, நெல்லை போலீசாரை அனுப்பியிருக்கலாம். அவர்கள் தமிழரசி வீட்டில் சோதனையிட்டது எங்களுக்கு தெரியாது,'' என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக