சனி, 11 பிப்ரவரி, 2012

சோலார் மோட்டார் பைக் "ரெடி': பெட்ரோல்,

மதுரை மாணவர்கள், மின்சக்தியால் இயங்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.
கே.எல்.என்.பொறியியல் கல்லூரி எம்.பி.ஏ., முதலாம் ஆண்டு மாணவர் கார்த்திக் ,23, சாக்ஸ் பொறியியல் கல்லூரி மெக்கானிக் இன்ஜி., மாணவர் ஹரி இணைந்து இந்த பைக்கை உருவாக்கியுள்ளனர். சூரிய சக்தியை "சோலார் பேனல்' மூலம் சேகரித்து, மின் சக்தியாக மாற்றி பேட்டரியில் சேகரிக்கப்பட்டு, இந்த பைக் இயக்கப்படுகிறது. இதற்காக தனி சோலார் பேனல், எலக்ட்ரிக் ட்ரைவ் வீலர், மோட்டார் வடிவமைக்கப்பட்டுள்ளது. காலை முதல் மாலை வரை சூரிய ஒளியில் "சார்ஜ்' செய்யப்பட்டால் 30 முதல் 35 கிலோ மீட்டர் வரை இந்த பைக்கை ஓட்டலாம். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாமலும், விலையேறி வரும் பெட்ரோல், பற்றாக்குறை உள்ள மின்சாரம் இவற்றுக்கு மாற்றாக இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது.

கார்த்திக், ஹரி கூறியதாவது: பெட்ரோல் விலை உயர்வையடுத்து, மின்சாரத்தில் இயங்கும் பைக் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு நாளைக்கு 8 மணிநேர மின் தடையால் அதுவும் சாத்தியமில்லாமல் போனதால், சோலார் மூலம் இயங்கும் பைக் தயாரிக்க முடிவு செய்தோம். பழைய பொருள் விற்பனை செய்யும் சந்தையில் கிடைத்த பொருள்கள் மூலம் இந்த பைக் வடிவமைக்கப்பட்டது. இரவு இயக்குவதற்காக முகப்பில் சைக்கிளில் "டையனமோ லைட்' பயன்படுத்தப்பட்டுள்ளது. அலுவலகம் செல்வோர் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த பைக்கை வெயிலில் "பார்க்கிங்' செய்து விட்டு வீட்டுக்குத் திரும்பும் போது பயன்படுத்தலாம். ஒரு பைக் உற்பத்தி செய்ய தற்போது ரூ.60 ஆயிரம் செலவாகிறது. எங்களால் ரூ.25 ஆயிரத்துக்கு இந்த வகை பைக்கை உருவாக்க முடியும். அதற்காக "ஸ்பான்சர்' கிடைத்தால் நிச்சயம் சாதிப்போம் என்றனர். இவர்களை 72001 41686, 91506 10003ல் தொடர்பு கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக