வியாழன், 16 பிப்ரவரி, 2012

எனக்கு மேக்கப் தேவையில்லை! த்ரிஷா பளீர்!

trisha krishnan hotதமிழ் சினிமா ரசிகர்களிடம் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் நடிகை த்ரிஷா. த்ரிஷாவிற்கு வயதாகிவிட்டது, மூத்த நடிகை ஆகி விட்டார் என சில நடிகைகளே வதந்திகளை கிளப்பி விட்டார்களாம்.
 அதன் எதிரொலியாக அஹமது இயக்கத்தில் தன்னை விட சிறியவரான ஜீவாவுடன் கைகோர்த்து தனது இளமையை அவர்களுக்கு நிரூபிக்கப் போகிறாராம் த்ரிஷா. த்ரிஷா சில நாட்களாகவே நிகழ்ச்சிகளுக்கு வரும் போது மேக்கப் இல்லாமல் வந்தார். 
மூத்த நடிகை என்று மற்றவர்கள் பேசிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஏன் மேக்கப் இல்லாமல் வெளியே வருகிறீர்கள் என்று கேட்ட போது த்ரிஷா “ யாருக்காகவும் மேக்கப் போட்டுக் கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. நான் நானாகவே இருக்கிறேன்.
 மற்ற்வர்கள் பேசும் பேச்சு என்னை பாதிக்காது. நான் நடித்து வெளியான “பாடிகாட்” படத்தை பார்த்துவிட்டு பேசட்டும் நான் மூத்த நடிகையா? என்று. அடுத்து ஜூனியர் என்.டி.ஆர் உடன் ”தம்மு” என்ற படத்தில் நடித்து வருகிறேன். இயற்கையான தோற்றமே பெண்களுக்கு அழகு.
 பெண்களுக்கே இருக்கும் ஆசையினால் தான் கண்களுக்கு மட்டும் சிறிது மேக்கப் போடுகிறேன். பொருத்தமான ஆடை அணிவதே எனக்கு அழகு. நான் நல்ல கதைக்காக காத்திருப்பதை உணராத சிலர் என் வயதை பற்றி குறை கூறுகின்றனர்.” என்று நன்றாக காய்ச்சி விட்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக