வியாழன், 23 பிப்ரவரி, 2012

மாதவன்: படத்திற்கு தேவைப்பட்டால் தெருவில் நிர்வாணமாகவும் ஓடுவேன்

படத்திற்கு தேவைப்பட்டால் தெரிவில் நிர்வாணமாகவும் ஓடுவேன் என்று நடிகர் மாதவன் தெரிவி்த்துள்ளார்.
நடிகர் மாதவன், பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவுடன் சேர்ந்து ஜோடி பிரேக்கர்ஸ் என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். அந்த படம் நாளை ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் இந்த படம் குறித்து மாதவன் கூறியதாவது,ஜோடி பிரேக்கர்ஸ் படத்தில் எனக்கு கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரம் மிகவும் பிடித்துள்ளது. நல்ல பையனாக நடித்து, நடித்து போர் அடித்துவிட்டது. அதனால் இந்த படத்தில் எனது கேரக்டர் சுவாரஸ்யமாக உள்ளது. செய்யும் தொழிலே தெய்வம் என்று நினைப்பவன் நான். படத்திற்கு தேவைப்பட்டால் தெருவில் நிர்வாணமாகக் கூட ஓடுவேன்.

ஜோடி பிரேக்கர்ஸ் படத்தில் வரும் முத்தக் காட்சிகளில் நடிக்க எனக்கு கஷ்டமாக இல்லை என்றார். அதற்கு மாதவனின் மனைவி என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.
ஆண்டுக்கொரு படம் நடித்தால் போதும் என்று நினைத்து தனது கொள்கையில் உறுதியாக இருப்பவர் மாதவன். இப்படி வருடத்திற்கு ஒரு படம் நடித்தால் குடும்பத்தை எப்படி ஓட்டுவது என்று அவரிடம் கேட்டதற்கு, எனக்கு பணக் கஷ்டம் எதுவும் கிடையாது. விளம்பரப் படங்களில் நடிப்பதால் அதன் மூலம் எனக்கு நல்ல வருமானம் வருகிறது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக