திங்கள், 6 பிப்ரவரி, 2012

பொதுக்குழு 'சக்ஸஸ்': குடும்பதோடு கோலாலம்பூர் போனார் மு.க.அழகிரி!


Azhagiri
சென்னை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தனது மனைவி மற்றும் குடும்பத்தினரோடு கோலாலம்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளார். இது தனிப்பட்ட முறையிலான பயணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை இரவு விமானம் மூலம் அழகிரி, மனைவி காந்தி மற்றும் குடும்பத்தினர் கிளம்பிச் சென்றனர். சென்னை விமான நிலையத்தில் தன்னை சந்தித்த செய்தியாளர்களிடம், இது தனிப்பட்ட பயணம் என்றார் அழகிரி.சமீபத்தில் நடந்த திமுக பொதுக்குழுவில் பெரும் அமளி ஏற்பட்டது. அழகிரியின் குரல் போல ஒலித்த மூத்த தலைவர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு எதிராக பெரும் குரல்கள் ஒலித்தன. ஸ்டாலின் ஆதரவாளர்களால் எழுந்த இந்த எதிர்ப்பால் வீரபாண்டியார் மட்டுமல்லாமல் கட்சியின் மூத்த தலைவர்களும் கூட அதிர்ச்சி அடைந்தனர்.
கருணாநிதியே குறுக்கிட்டு கண்டிக்க நேரிட்டது.

இந்த அமளி துமளி மற்றும் எதிர்ப்புகளால், மு.க.ஸ்டாலினுக்கு பதவி உயர்வு தரும் முடிவையும், கனிமொழிக்குப் பதவி தரும் முடிவையும் கட்சித் தலைமை எடுக்கவில்லை.

பொதுக்குழுக் கூட்டத்திலும், அதற்கு முதல் நாள் நடந்த கட்சியின் உயர் மட்ட செயல் திட்டக் குழுக் கூட்டத்திலும் மு.க.அழகிரி கலந்து கொண்டார். ஆனால் எதுவும் பேசவில்லை. மாறாக தனக்கு எதிராக, பாதகமாக எதுவும் நடந்து விடாமல் கவனமாக காய் நகர்த்தினார். தற்போது எல்லாம் நல்லபடியாக முடிந்த நிலையில் மலேசியாவுக்குக் குடும்பத்துடன் கிளம்பிப் போயுள்ளார் அழகிரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக