திங்கள், 6 பிப்ரவரி, 2012

வெங்கட் பிரபு சூர்யாவை வைத்து அடுத்த ஆட்டம்!

வெங்கட் பிரபுவின் மங்காத்தா வெற்றியடைந்ததைத் தொடர்ந்து சூர்யாவை வைத்து படம் எடுக்கிறார். சூர்யா இப்போது நடித்துக் கொண்டிருக்கும் மாற்றான் படம் முடிந்ததும் வெங்கட் பிரபு படத்தில் நடிக்கிறார்.
 சூர்யா நடிக்கும் இந்த படத்தை ”முக்தா எண்டர்டெயின்மெண்ட்(பி)லிட்” என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. முக்தா சீனிவாசன் தயாரித்த பல படங்கள் வெற்றியடைந்துள்ளன. முக்தா சீனிவாசனின் உறவினரான முக்தா கோவிந்தனுடன் இணைந்து உருவானது தான் முக்தா 
எண்டர்டெயின்மெண்ட்ஸ். 
இந்த நிறுவனத்தின் முதல் படமே இது தான். வருடத்திற்கு 3 பிரம்மாண்ட படங்களை தயாரிக்கும் முடிவுடன் களம் இறங்கியுள்ளது. சூர்யா படம் முடிந்தவுடன் முக்கிய நட்சத்திரத்தை வைத்து படம் எடுக்கிறார் வெங்கட் பிரபு. அந்த படத்தையும் முக்தா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தான் தயாரிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக