செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

கிங் பிஷர் விமான சேவை மூடப்படுமா? தொடரும் ரத்து- விமானிகள் விலகல்

கிங்பிஷர் நிறுவனத்தின் விமான சேவைகள் 4-வது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் நிறுவனம் மூடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
விமானங்களை முன்னறிவிப்பின்றி திடீரென ரத்து செய்தது தொடர்பாக விமான சேவைகள் இயக்ககத்திடம் கிங் பிஷர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சஞ்சய் அகர்வால் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றார்.
இந்நிலையில் மும்பையிலிருந்து 13, கொல்கத்தாவிலிருந்து 8, டெல்லியிலிருந்து 4 என விமான சேவைகளை திடீரென ரத்து செய்ததால் பயணிகள் தவிப்புக்குள்ளாகினர்.
பிரதான சேவையான மும்பை-டெல்லி விமானங்களையும் கூட கிங் பிஷர் ரத்து செய்துள்ளது. கிங்பிஷர் விமான சேவை நிதி நெருக்கடியால் தவிப்பதால் விமானிகள் பலரும் பணியிலிருந்து விலகிவிட்டனர்.

ஏற்கெனவே கடந்த சில மாதங்களாக ஊழியர்களுக்கு ஊதியமும் வழங்காத நிலையில் விமானங்களும் ரத்து செய்யப்பட்டு வருவதால் விமான சேவையை அனேகமாக கிங் பிஷர் நிறுவனம் நிறுத்திவிடக் கூடும் எனத் தெரிகிறது.

இருப்பினும் இதை கிங் பிஷர் நிறுவன உரிமையாளர் விஜய்மல்லையா மறுத்துள்ளார்.

நிதி நெருக்கடியை சமாளிக்க எரிபொருளை நேரடியாக இறக்குமதி செய்யவும் தமது நிறுவனப் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நேரடியாக விற்க அனுமதிக்க வேண்டும் என்பதும் விஜய்மல்லையாவின் நீண்டநாள் கோரிக்கை.

மத்திய அரசின் உதவி எதுவும் தங்களுக்குத் தேவை இல்லை என்றும் கூறிவருகிறார் விஜய்மல்லையா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக