புதன், 15 பிப்ரவரி, 2012

நாய் வளர்ப்பவர்களுக்கு இதயநோய் வராது


ஜப்பானில் டோக்கியோ அருகே கனகவா என்ற இடத்தில் உள்ள கிடாசோவா பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் நீண்ட நாட்களாக நோயினால் அவதிப்பட்ட 200 பேரிடம் ஆய்வு மேற்கொண்டனர்.

அவர்களில் நாய் வளர்ப்பவர்களின் இதயம் நல்ல திடகாத்திரமாகவும், மனதில் வேதனைகள் இன்றி லேசாக இருப்பதையும் கண்டறிந்தனர். அதே நேரத்தில் நாய்களை வளர்க்காதவர்களின் இதயம் பல குழப்பங்கள் மற்றும் வேதனைகளுக்குட்பட்டு இருந்தது.

நாய்களை வளர்ப்பவர்கள் இதய நோய் இன்றியும், நாய்களை வளர்க்காதவர்கள் இதயம் பாதிக்கப் பட்டவர்களாகவும் இருந்தனர்.

நாய்களுடன் கொஞ்சி விளையாடுவதன் மூலம் மன இறுக்கம் குறைவதா இதற்கு காரணம் என ஆராய்ச் சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே இதயம் லேசாக, ஆரோக்கியத்துடன் வாழ வேண் டுமா? நாய்களை வளர்ப்பது சிறந்த வழி என்றும் அறிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக