திங்கள், 6 பிப்ரவரி, 2012

- பாபா டூ சந்திரமுகி - ரஜினி எழுதிய புத்தகம்!உண்மை இருந்ததால் வெளியிடவில்லை

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கனடா நாட்டின் இயல் விருது பெற்றிருக்கிறார். இதற்கான பாராட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் எழுத்தாளர்கள், திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக ரஜினி அழைக்கப்படிருந்தார்.
எஸ்.ராமகிருஷ்ணன் ரஜினியின் நெருங்கிய நண்பர். பாபா படத்தில் ரஜினியுடன் பணியாற்றிய ராமகிருஷ்ணனின் இலக்கிய விருது நிகழ்ச்சிக்கு வருகை தந்து பெருமை சேர்த்தார் ரஜினி. விழாவில் ரஜினி பேசும்போது ”பாபா படத்தில் நடிக்கும் போது சில தகவல்களுக்காக எழுத்தாளர் சுஜாதாவை நாடினேன்.

அவர் தான் ஷங்கரிடன் ஒருவர் இருக்கிறார் எனறார். ஷங்கரை நான் மீட் பண்ணேன். ராமகிருஷ்ணன்னு ஒரு பையன் இருக்காரு. ரொம்ப விஷயம் தெரியும். ஆனா தெரிஞ்சா மாதிரி காட்டிக்க மாட்டாரு. அப்படியே அள்ளி வீசுவாரு. நாமதான் தேவையானதை எடுத்துக்கணும்' என்றார் ஷங்கர் சொன்னார். அதன் பிறகு ராமகிருஷ்ணனின் அறிமுகம் கிடைத்தது. அவரோடு பேச ஆரம்பித்த பின் அவர் கூறிய சில தகவல்களையும், கருத்துகளையும் கேட்டு நான் பிரமிச்சுப் போனேன். எனக்கு தெரியாத பல விஷயங்களை பற்றி சொன்னாரு. இந்த வயசுலயே இவ்வளவு அறிவானு ஆச்சர்யப்பட்டேன்.

பாபா - சந்திரமுகி சின்ன காலம் தான். ஆனா என் வாழ்க்கையில் அது ஒரு மறக்கமுடியாத காலம். அந்த நாட்களை பற்றி நினைத்து இப்போது நான் சிரித்தாலும், ஒரு நாள் அது என் வேதனைக்கு காரணமா இருந்ததால் அதை அப்படியே ஒரு தொடர்கதையா, ஒரு ஆட்டோபையோகிராஃபியா எழுத நினைத்தேன். ராமகிருஷ்ணனிடமே அதை எழுதவும் சொன்னேன். என் கதையை ஏன் அவரை எழுத சொன்னேன் என்றால், எனக்கு தமிழில் எழுத வராது, ஆங்கிலமும் வராது, கன்னடம் மறந்தே போய்விட்டது. நான் சொல்ல சொல்ல அவர் எழுதினார். கரெக்‌ஷன் செய்து விரிவாக எழுதி கொண்டுவந்தார். ரொம்ப அருமையாக எழுதியிருந்தார். ஆனால் அதில் உண்மை இருந்தது. அந்த புத்தகம் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதவில்லை. ஆனால் அதில் உள்ள விஷயங்கள் வெளியே வந்தால் சிலர் மனதை புண்படுத்திவிடுமோ என்று நினைத்தேன். அதனால் அதை பிறகு வெளியிடலாம் என்று வைத்துவிட்டேன்.

அதை எழுதியதற்காக எஸ்.ராமகிருஷ்ணிடம் ஒரு தொகையைக் கொடுத்தேன். ஆனால் அதை அவர் வங்க மறுத்துவிட்டார். மிகவும் கஷ்டமான சூழலில் அவர் இருந்தபோதும், அவர் பணத்தை வாங்க மறுத்துவிட்டார். இது என்னை அவமானபடுத்துவது மாதிரி என்று சொன்னார்.... என்று எஸ்.ராமகிருஷ்ணனின் பண்புகளை பற்றி பாராட்டி பேசினார் ரஜினி.
நான் எஸ்.எஸ்.எல்.சி தான் படிச்சிருக்கேன். ஆனால் வாழ்க்கைக்குத் தேவையான பல புத்தகங்களை படித்திருக்கிறேன். இன்றைய இளைய தலைமுறை புத்தகங்களை படிக்க வேண்டும். ஒரு திரைப்படம் என்பது, ஒரு இயக்குனரின் கற்பனை. ஆனால் ஒரு புத்தகைத்தை நீங்கள் படிக்கும்போது அதன் காட்சிகளை கற்பனை செய்வதன் மூலம் நீங்களே இயக்குனராகளாம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக