வியாழன், 16 பிப்ரவரி, 2012

தே.மு.தி.க. வெளியேறியதால் விஜயகாந்தின் செல்வாக்கு உயர்ந்து இருக்கிறதா?

மிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்துக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது.
தே.மு.தி.க. உறுப்பினர் பால், பஸ் கட்டண விலை உயர்வு குறித்து பேசியதைத் தொடர்ந்து இந்த மோதல் உருவானது. ஆளும் கட்சி உறுப்பினர்களைப் பார்த்து விஜயகாந்த் மிரட்டும் தொனியில் பேச, ப த்து நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். எதிர்க்கட்சித் தலைவரான அவருக்கு அரசு கொடுத்த காரையும் திருப்பி அனுப்பிவிட்டார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வும், தே.மு.தி.க.வும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டதால்தான் மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. இப்போது யாரால் யாருக்கு லாபம் என்ற விவாதம் அரசியல் மேடைகளில் சூடுபிடித்துள்ளது. இந்த சூழ்நிலையில் ஆளும் கட்சி கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. வெளியேறியதால் விஜயகாந்தின் செல்வாக்கு உயர்ந்து இருக்கிறதா? சரிந்து இருக்கிறதா? என்ற ஒற்றைக் கேள்வியுடன் தமிழகம் முழுவதும் அதிவேக சர்வே ஒன்றை எடுத்தோம்.



thanks kumudam + raj trichy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக