ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

தமிழ் படம் தான் வேண்டும்- தமன்னா பிடிவாதம்

நடிகை தமன்னா கேடி படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர். அயன், பையா போன்ற படங்களின் வெற்றியால் நம்பர்1 நடிகையாக வலம் வந்த தமன்னா ஏனோ தமிழில் கொஞ்சம் கேப் விட்டுவிட்டார்.அடுத்தடுத்து தெலுங்கில் படங்கள் வந்தாலும் தமிழில் நடிக்காததால் தமன்னாவை இரண்டாவது நடிகையாக நடிக்க கேட்டு விட்டார் ஒரு இயக்குனர்.தமிழ் படங்களில் நடிக்கவில்லையென்றால் மார்க்கெட் இல்லையென்று அர்த்தமா என்று பொங்கி எழுந்தவர் தமிழ் படங்காளில் நடிக்க தயார் என்று இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் தெரியப்படுத்தியிருக்கிறார்.சில இந்தி படங்களும், தமிழ் படங்களும் தமன்னாவிடம் கதை சொல்ல காத்திருந்த போது தமன்னா தமிழ் படங்களுக்கே முன்னுரிமை கொடுத்தாராம். இது பற்றி தமன்னாவின் தந்தை “ தமன்னாவிற்கு கிட்டத்தட்ட 4 இந்தி படங்கள் வந்துள்ளன. 

ஆனால் தமன்னா தமிழ் படங்களில் நடிப்பதிலேயே ஆர்வத்துடன் இருக்கிறார். சரியான கதைக்காக காத்திருக்கிறார். கதையை பொருமையாகக் கேட்டு கதையில் தமன்னாவின் கதாபாத்திரத்தில் கவனத்துடன் உள்ளார்.” என்று கூறினார். 

தமன்னா இந்தியில் தான் அறிமுகமானார் பிறகு ஏன் இந்தியில் நடிக்க மறுக்கிறார்? என்ற கேள்வியில் இருக்கிறது தமன்னாவின் ரசிகர் பட்டாளம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக