ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

இனி விளங்கிடும் சி பி ஐ , தா.பாண்டியன் மீண்டும் மாநிலசெயலாளர்


Tha Pandian
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் கட்சியின் மாநிலச் செயலாளராக மீண்டும் தா.பாண்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சிபிஐ தமிழ் மாநில 22வது மாநில மாநாடு நடைபெற்றது. இன்று மாநாடு நிறைவடைந்தது. இந்த மாநாட்டின் இறுதியில் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
அப்போது மாநிலச் செயலாளராக தா.பாண்டியனை மூன்றாவது முறையாக தேர்வு செய்ய மூத்த தலைவர் நல்லகண்ணு வழிமொழிந்தார்.மேலும் மாநில நிர்வாகிகளாக 138 பேர் பரிந்துரைக்கப்பட்டனர். நல்லகண்ணு, மகேந்திரன் ஆகியோர் இவர்களில் சிலர். பின்னர் அனைவரும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் தவிர கட்சியின் தேசிய மாநாட்டிற்காக 110 பேரும் தேர்வாகினர். விளங்கிடும்
கடந்த சட்டசபைத் தேர்தலில் கட்சிக்காக 9 எம்.எல்.ஏக்களைப் பெற்றுத் தந்தமைக்காகவும், கட்சியின் வளர்ச்சிக்காக சீரிய முறையில் பணியாற்றி வருவதற்காகவும் மீண்டும் தா.பாண்டியனை மாநிலச் செயலாளராக தேர்வு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முதுபெரும் அரசியல்வாதிகளில் ஒருவரான தா.பாண்டியன், ஆரம்பத்தில் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் தலைவராக இருந்தவர். மேலும் காங்கிரஸ் கட்சியிலும் இருந்தவர். காங்கிரஸ் சார்பில் வட சென்னை எம்.பி தொகுதியில், 1989 மற்றும் 91 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.

1996ல் இதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டுத் தோற்றார். பின்னர் 2009ல் நடந்த தேர்தலில் இதே தொகுதியில், சிபிஐ சார்பில் போட்டியிட்டுத் தோற்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக