ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

தனியாய்த் தவிக்கும் மாறன்கள்!

ஏர்செல் நிறுவன பங்குகள் விற்பனை தொடர்பாக சிவசங்கரன் கொடுத்த புகாரில் கூடுதல் ஆவணங்கள் கிடைத்துள்ளது என்று கடந்த இதழில் குறிப்பிட்டு இருந்தோம். மொரீஷியஸ் தீவில் இருந்து சன் டி.டி.எச். நிறுவனத்துக்கு பெரும் தொகை வந்ததற்கான ஆதாரங்கள் சிக்கியதாக தெரிவித்து இருந்தோம்.
இந்நிலையில் மாறன் சகோதரர்கள் மீது அமலாக்கப்பிரிவு வழக்கு ஒன்றைப் பதிவு செய்துள்ளது. முறைகேடாக ரூ.550 கோடிக்கு பணப்பரிமாற்றம் நடந்ததாக கூறி வழக்குப் போட்டிருக்கிறார்கள். இது கிட்டத்தட்ட ஹவாலா மோசடி போன்றது என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கிறது. மேலும், தவறு நடந்துள்ளது என்பதை அமலாக்கத்துறை உறுதி செய்துவிட்டது. இனி மாறன்கள் தப்பிக்க வாய்ப்புகள் குறைவு என்று சொல்கிறார்கள். இந்த வழக்கில் அவர்கள் ஷாமீனில் வருவதும் முடியாது என்று சொல்கிறார்கள். ஏற்கெனவே ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றப்பத்திரிகையில் மாறன்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. விரைவில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை வழங்கப் போகிறதாம். அதற்கு முன்னதாக அவர்களைக் கைது செய்யவும் சி.பி.ஐ. தீவிரமாக இருப்பதாக சொல்கிறார்கள். அமலாக்கத்துறையும் புதிய வழக்கில் கைது செய்யக் கூடும் என்றும் செய்திகள் வருகிறது. இந்நிலையில் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்த அதே நாளில், டெல்லியில் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை மாறன்கள் சந்தித்துப் பேசியி ருக்கிறார்கள். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

புதிய வழக்குகள் குறித்து மாறன் தரப்பில், ‘‘தி.மு.க.வை மிரட்டுவதற்காகவே காங்கிரஸ் தொடர்ந்து வழக்குகளைப் போட்டு வருகிறது. தேர்தலுக்கு முன்பு ராசா, கனிமொழியைக் கைது செய்தார்கள். கடந்த பொதுக்குழுவில் காங்கிரஸ் கூட்டணி வேண்டாம் என்று சிலர் பேசியதால், தி.மு.க.வை மிரட்டும் வகை யில் அமலாக்கப்பிரிவை வைத்து வழக்குப் போட வைத்துள்ளனர். டெல்லியில் உள்ள தலைவர்களுக்கு கருணாநிதி குடும்பத்தோடு, மாறன்கள் நல்ல டேர்ம்ஸில் இல்லை என்பது சொன்னாலும் புரியவில்லை. சி.பி.ஐ. வழக்கை தனியாக சந்தித்தது போல இந்த வழக்கையும் சந்திப்போம்’’ என்கிறார்கள்.
thanks kumudam + Manikkalingam sydney

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக