புதன், 8 பிப்ரவரி, 2012

அஜீத் - நயன் - ஆர்யா!ஏ எம் ரத்னம் தயாரிப்பில்

சொன்ன தேதிக்குள் படத்தை முடிக்கும் இயக்குநர்களில் ஒருவரான விஷ்ணுவர்தன், அடுத்து அஜீத்தின் படத்தை இயக்குகிறார். பில்லா 2-க்குப் பிறகு அஜீத் நடிக்கும் படம் இது.
இசை: யுவன் சங்கர் ராஜா. விஷ்ணுவர்தனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா தாண்டவம் படத்தில் பிஸியாக இருப்பதால், வேறு ஒருவரை வைத்து படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர். அநேகமாக வினோத் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்யலாம்.
இந்தப் படம் மூலம் தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் தனது அடுத்த சுற்றைத் தொடங்குகிறார். தமிழில் கலைப்புலி தாணுவுக்கு அடுத்த பிரமாண்ட தயாரிப்பாளர் என்ற பெயர் ரத்னத்துக்கு உண்டு. ஒரே நேரத்தில் 5 பெரிய பட்ஜெட் படங்களைத் தயாரித்துக் கொண்டிருந்தவர் ரத்னம்.
ஆனால் அவரது சரிவு, பாய்ஸ் படத்தில் ஆரம்பித்தது. அதன் பிறகு கில்லி, 7 ஜி ரெயின்போ காலனி என குறிப்பிடத்தக்க வெற்றிகள் வந்தாலும், எனக்கு 20 உனக்கு 18, தர்மபுரி, கேடி என அடுத்தடுத்த தோல்விகள் அவரை படத்தயாரிப்புக்கு தற்காலிக இடைவெளி விட வைத்தன.

இந்தப் 75 நாட்களுக்குள் படத்தை முடிக்கத் திட்டமிட்டுள்ள விஷ்ணுவர்தன், வரும் தீபாவளி 2012-ல் வெளியிட்டுவிடலாம் என ரத்னத்துக்கு உறுதி அளித்துள்ளாராம்.

முக்கியமான சமாச்சாரம்... இந்தப் படத்தில் அஜீத்துக்கு ஜோடி நயன்தாரா. பாஸ் என்கிற பாஸ்கரனுக்குப் பிறகு தமிழில் அவர் நடிக்கும் படம். பிரபு தேவாவைப் பிரிந்த செய்தியை சொல்லாமல் சொல்ல ஒப்புக் கொண்ட தமிழ்ப் படமும் கூட!

இன்னொரு முக்கிய விஷயம்... படத்தில் அஜீத்துடன் இணைந்து நடிக்கிறார், ஆர்யா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக