புதன், 8 பிப்ரவரி, 2012

BJP முறைகேடாக ஒதுக்கிய 2ஜி லைசென்ஸ்கள்-எப்ஐஆர் பதிவு செய்த அமலாக்கப் பிரிவு


Pramod Mahajan
டெல்லி: பாஜக ஆட்சியில் பிரமோத் மகாஜன் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது முறைகேடாக ஒதுக்கப்பட்ட 2ஜி லைசென்ஸ்கள் தொடர்பாக அமலாக்கப் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோர் மீது அமலாக்கப் பிரிவினர் அன்னிய செலாவணி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இந் நிலையில், மத்தியில் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சிக் காலத்தில் நடந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் ஒதுக்கீடுகள் குறித்த விசாரணையையும் அமலாக்கப் பிரிவு தீவிரப்படுத்தியுள்ளது.2001-03ம் ஆண்டு காலகட்டத்தில் பிரமோத் மகாஜன் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் அள்ளித் தரப்பட்டது.

இதில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அமலாக்கப் பிரிவு, அப்போதைய தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் ஷியாம்லால் கோஷ், முன்னாள் தொலைத் தொடர்புத்துறை துணை டைரக்டர் ஜெனரல் ஜே.ஆர். குப்தா ஆகியோர் மீது அன்னிய செலாவணி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் (Prevention of Money Laundering Act-PMLA) எப்ஐஆர் பதிவு செய்துள்ளது.

அதே நேரத்தில் மகாஜன் மறைந்துவிட்டதால், அவரது பெயர் இதில் சேர்க்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக