புதன், 8 பிப்ரவரி, 2012

8 மணி நேர மின்வெட்டை கண்டித்து மறியல்

Late news:தமிழகம் முழுவதும் எட்டு மணி நேரம் மின்வெட்டு இன்று முதல் அமுல் மின்சார வாரியம் அறிவிப்பு . திமுகவின் முன்று மணி நேர மின்வேட்டுக்கே குய்யோ முய்யோ என்று கூப்பாடு போட்டவர்கள் எங்கே ஒழிந்தார்கள்?  

கோவையில் கடந்த சில நாட்களாக 8 மணிநேரம் மின்சாரம் தடைபடுகிறது. இதனால், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறுந்தொழில் கூடங்களில் 50 சதவீத உற்பத்தி குறைந்துவிட்டது. அறிவிக்கப்படாத மின் வெட்டால் குறுந்தொழில் கூடங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழில் முனைவோர், வங்கிகளில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
உற்பத்தி வெகுவாக குறைந்ததுடன், கடன் சுமையும் அதிகரித்துள்ளதால் தொழில் கூடங்களில் உள்ள இயந்திரங்களையும் விற்கும் நிலை உருவாகி உள்ளது. கோவையில் தினமும் 8 மணி நேரம் மின்சாரத்தை துண்டிப்பதற்கு பதிலாக வாரத்தில் ஒருநாள் மின் விடுமுறை அளிக்கலாம். மற்ற 6 நாள் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை 11 மணியளவில் கோவை கணபதி மின்வாரிய அலுவலகத்தை சிறு, குறு தொழில் முனைவோர் முற்றுகையிட்டனர்.

 மின்வாரிய அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் அங்கிருந்து ஊர்வலமாக வந்து சத்தி சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இவர்களுடன் சேர்ந்து தொழில் மற்றும் வர்த்தக சங்கத்தினரும் (கீட்டா) மறியல் செய்தனர். ஒரு மணி நேரம் நீடித்த மறியலால் சத்தி ரோட்டில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. சம்பவ இடத்துக்கு வந்த சரவணம்பட்டி போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து கலைந்து சென்றனர். சேலம்: இதேபோல, அறிவிக்கப்படாத 8 மணி நேர மின்வெட்டை கண்டித்து சேலம் மாவட்டம் உடையாபட்டி மின்சார அலுவலகத்தை விசைத்தறி தொழிலாளர்கள் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக