வியாழன், 9 பிப்ரவரி, 2012

இந்தியா முழுவதும் ரூ.500 கோடியில் 50 சிறுநீரக மருத்துவமனைகள்

 இந்தியா முழுவதும் ரூ.500 கோடி முதலீட்டில் 50 சிறுநீரக மற்றும் லாப் ராஸ்கோப்பி மருத்துவ மனைகள் திறக்கப்பட வுள்ளன என்று ஆர்.ஜி. ஸ்டோன் சிறுநீரக மற் றும் லாப்ராஸ்கோப்பி மருத்துவமனைகளின் தலைவர் பல்தேவ் ராஜ் கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
பிப்ரவரி மாதத்தை புற்றுநோய் மாதமாக கருதி சென்னையில் பல் வேறு இடங்களில் சிறு நீரகப் புற்றுநோய் விழிப் புணர்வு முகாம்கள், இல வச ஆலோசனை முகாம் கள் ஆகியவை பிப்ரவரி 4ஆம் தேதி முதல் நடத் தப்பட்டு வருகிறது.
இந்தியா முழுவதும் 2 ஆண்டுகளில் ரூ.500 கோடி முதலீட்டில் 50 மருத்துவமனைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் 2 அல்லது 3 மருத் துவமனைகள் சென்னை யில் அமைக்கப்படும்.
சிறுநீரக நோய் அதிகம் உள்ள நகரத்துக்கு முக் கியத்துவம் கொடுக்கப் படும் என்றார் அவர்.
புராஸ்டேட் சுரப்பி புற்றுநோய் குறித்து மருத்துவமனையின் தலைமை சிறுநீரக மருத் துவர் டாக்டர் ஆர்.விஜய குமார் கூறியது:
புற்றுநோய் பாதிப்பு மேற்கத்திய நாடுகளில் அதிகமாக உள்ளது. ஆனால், அவர்கள் நவீன தொழில்நுட்ப முறையில் புராஸ்டேட் சுரப்பி பிரச்சினைக்கு சிகிச்சை அளிக்கின்றனர். புராஸ்டேட் சுரப்பி புற்று நோய், 20 முதல் 40 வயது உள்ள ஆண்க ளுக்கு வர வாய்ப்புள்ளது. இதனை முன்னரே கண் டறிந்து உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டால் குணப்படுத்தலாம்.  இந்த புற்றுநோய் முதுகு எலும்பு அல்லது தொடை எலும்புகளுக்குப் பரவி னால் பாதிப்பு அதிகம். இந்த மாதிரியான நிலை யில் பாதிப்பட்டவருக்கு எலும்பு முறிவு ஏற்பட் டால் நிரந்தரமாக நட மாட முடியாது. அதனால் உரிய பரிசோதனைகள் மூலம் இந்த நோயை கண்டறிந்து குணப்ப டுத்த வேண்டும் என்றார் டாக்டர் ஆர்.விஜயகுமார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக