வியாழன், 16 பிப்ரவரி, 2012

மார்ச் 18ல் சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: தேர்தல் நன்னடத்தை விதிகள் உடனடி அமல்

சங்கரன்கோவில் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் மார்ச் 18ம் தேதி நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

சங்கரன்கோவில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வாக இருந்த கருப்பசாமி, சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதையடுத்து அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வரும் மார்ச் 18ம் தேதி நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பிப். 22: சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வேட்புமனுத்தாக்கல் துவக்கம்
பிப்.29: வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாள்
மார்ச் 1: வேட்புமனு பரிசீலனை
மார்ச் 3: வேட்புமனு வாபஸ் பெற கடைசி தேதி
மார்ச் 18: ஓட்டுப்பதிவு
மார்ச் 21: ஓட்டு எண்ணிக்கை

தேர்தல் நன்னடத்தை அமல்: சங்கரன்கோவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, அங்கு தேர்தல் நன்னடத்தை விதிகள் உடனடியாக அமல்படுத்தப்படுவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்தார். கர்நாடக மாநிலம் உடுப்பி சிக்மகளூர் எம்.பி., தொகுதி இடைத்தேர்தலும் மார்ச் 18ம் தேதி நடக்கிறது.

கட்சிகள் நிலை: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் முத்துச்செல்வி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தி.மு.க., சார்பில் வேட்பாளர் நேர்காணல் நாளை சென்னையில் நடக்கிறது. ம.தி.மு.க., தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என்று அறிவித்திருந்தது. தே.மு.தி.க., நிலை தெரியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக