புதன், 4 ஜனவரி, 2012

Rajasthan .நர்ஸ் எரித்து கொலை முன்னாள் அமைச்சர் பின்னணியில்

Bhanwari Devi
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் காணாமல் போன நர்ஸ் பன்வாரி தேவி எரித்துக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. அவர் எரித்துக் கொல்லப்பட்ட இடத்தை சிபிஐ அதிகாரிகள் கண்டுபிடித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பன்வாரி தேவியின் உடல், ஒஸ்ஸியான் கிராமத்திற்கு அருகே எரிக்கப்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. ராஜஸ்தான் மாநில முன்னாள் அமைச்சர் மஹிபார் மதர்னாவின் உத்தரவின் பேரிலேயே பன்வாரி தேவி கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டதாகவும் சிபிஐ தகவல்கள் தெரிவிக்கின்றனர்இந்த கொலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மல்கான் சிங்குக்கும் தொடர்பு உள்ளதாக சிபிஐ கூறுகிறது. பன்வாரி தேவி கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஆரம்பத்திலிருந்தே சிபிஐக்கு இருந்து வந்தது. தற்போது பன்வாரி தேவி எங்கு எரிக்கப்பட்டார் என்பதை சரியாக கண்டுபிடித்துள்ளது சிபிஐ.

2011ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் பன்வாரியைக் காணவில்லை. இவருக்கும் அமைச்சர் மதர்னாவுக்கும் தொடர்பு இருந்து வந்தது. தற்போது பன்வாரி தேவி கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட இடத்தை சிபிஐ கண்டுபிடித்துள்ளதைத் தொடர்ந்து விரைவில் பல முக்கியஸ்தர்கள் கைது செய்யப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பன்வாரியை கொலை செய்யும் திட்டத்தை மதர்னாவும், மல்கான் சிங்கும் செய்துள்ளனர். அவரைக் கொலை செய்தது சஹிராம் என்பவராவார். இவர்தான் பன்வாரியைக் கடத்திக் கொண்டு போய் கொலை செய்துள்ளார். பின்னர் உடலை எரிக்கும் பொறுப்பை பிஸ்னா கும்பலிடம் அவர் கொடுத்துள்ளார். அந்தக் கும்பல் ஒஸ்ஸியான் கிராமத்திற்கு அருகே பன்வாரி தேவியின் உடலை எரித்துள்ளது.

மேலும் ஒரு திடுக்கிடும் திருப்பமாக பன்வாரி தேவி கடத்தப்படவுள்ளது அவரது கணவர் அமர்சந்துக்கு முன்பே தெரியுமாம். அவரது வாயைக் கட்ட ரூ. 10 லட்சம் பணத்தைக் கொடுத்துள்ளது இந்த கொலைகாரக் கும்பல்.

அமைச்சர் மதர்னாவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த நர்ஸ் இந்த பன்வாரி தேவி. தானும், அமைச்சரும் நெருக்கமாக இருந்ததை வீடியோவில் படமாக்கி அந்த சிடியைக் காட்டி மதர்னாவை மிரட்டி வந்தார் பன்வாரி. இதனால் ஆத்திரமடைந்த மதர்னா, பன்வாரியைத் தீர்த்துக் கட்டினார் என்பது சிபிஐயின் குற்றச்சாட்டாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக