புதன், 4 ஜனவரி, 2012

இந்திய தயாரிப்பு போன்ற சீன போலி பொருளால் ரூ.26,500 கோடி இழப்பு

புதுடில்லி,ஜன.4-இந்தியாவின்பிரபல நிறுவனங்களின் தயாரிப் புகள் போன்று போலி யான பொருள்களை சீனா தயாரித்து சந்தை யில் விற்கிறது. அத னால், நம்நாட்டுக்கு ஆண்டிற்கு ரூ.26,500 கோடி வருவாய் இழப்பு ஏற்படுவதாக அதிகா ரிகள் தெரிவித்தனர்.
வேகமாக விற்பனை யாகும் பொருள்கள் உற்பத்தியில் (எப். எம்.சி.ஜி) தோல், ஹேர் ஆயில், டூத்பேஸ்ட் போன்றவற்றை டாபர் நிறுவனமும், சிகரெட், காகித பெட்டிகள், வேளாண் பொருள் களை அய்டிசியும் தயா ரிக்கின்றன. இப் பொருள்களுக்கு உள் நாடு, வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. இதை சீனாவில் சில கும்பல் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி போலியான பொருள் களை தயாரிக்கின்றனர். இந்தியாவில் தயாரானது போன்ற போலி முத்திரை களுடன் சட்ட விரோத மாக உலக நாடுகளுக்கு குறிப்பாக இந்தியா மற் றும் ஆப்ரிக்க நாடு களுக்கு அதிகம் ஏற்று மதி செய்கின்றனர். அத னால், நம்நாட்டுக்கு ஆண்டிற்கு ரூ.26,500 கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
நோக்கியா, அடி டாஸ், ரீபோக், நிவியா போன்ற பன்னாட்டு பொருள்களையும் போலியாக தயாரித்து சந்தையில் விற்கின்றனர். மேலும், மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் போலியான மருந்து, மாத்திரைகளை தரமற்ற முறையில் தயாரித்து, குறைந்த விலைக்கு சந் தையில் விற்கின்றனர். இதுபோன்று சீனாவில் தயாரித்த போலி மருந் துகள் நைஜீரியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் அண்மையில் கைப் பற்றப்பட்டது என்று மத்திய கலால் மற்றும் சுங்கவரி வாரியத் தலை வர் (சிபிஇசி) எஸ்.கே. கோயல் தெரிவித்தார்.
இந்தியாவின் மிக பிரபலமான பொருள் களின் பெயரில், சீனா வில் போலியாக தயாரிக் கப்பட்ட பொருள்கள் டில்லியில் பல்வேறு பகுதிகளில் கைப்பற்றப் பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக