புதன், 25 ஜனவரி, 2012

Hindu ராம் - ரமேஷ் ரங்கராஜன் மீது 400 ஏக்கர் நில மோசடி புகார்..அப்படி போடு


இந்து என்.ராம் - ரமேஷ் ரங்கராஜன் மீது நில அபகரிப்பு புகார் - அஇஅதிமுக முன்னாள் எம்பி போலீசில் மனு ரூ.300 கோடி சொத்தை ரூ.30 கோடிக்கு பெற முயற்சி ஆவணங்கள் திருடியதாகவும் ராம் மீது குற்றச்சாட்டு

சென்னை: பிரபல ஆங்கில இதழ் இந்து நிர்வாகி ராம் மற்றும் ரமேஷ் ரங்கராஜன் மீது 400 ஏக்கர் நில மோசடி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது . புகார் விவரம் வருமாறு, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 300 கோடி ரூபாய் மதிப்புள்ள 400 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயல்வதாக, இந்து நாளிதழ் நிர்வாகி என்.ராம் மற்றும் ரமேஷ் உள்ளிட்டோர் மீது, அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமி, புகார் தெரிவித்துள்ளார். அப்படி போடு


தமிழ்நாடு காவல்துறை தலைவர் கே.ராமானுஜம் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஜே.கே.திரிபாதியிடம், இது தொடர்பாக கே.சி.பழனிச்சாமி, தனித்தனியாக புகார் மனுக்களை வழங்கியுள்ளார். அதில், தி இந்து நாளிதழை நடத்தும் கஸ்தூரி அண் சன்ஸ் நிறுவனத்திற்கு உட்பட்ட, ஸ்போர்ட்டிங் பாஸ்ட் டைம் என்ற நிறுவனத்தையும் அதற்கு சொந்தமான நிலங்களையும், 2004ம் ஆண்டு, 30 கோடி ரூபாய்க்கு வாங்கியதாக, கே.சி.பழனிச்சாமி கூறியுள்ளார்.
மாமல்லபுரம் அருகே உள்ள 400 ஏக்கர் பரப்புள்ள அந்த நிலங்களின் மதிப்பு சில நாட்களில், ரூ.300 கோடி ரூபாயாக உயர்ந்து விட்டதாக தெரிவித்துள்ள கே.சி.பழனிச்சாமி, இதை அறிந்து கொண்டு, இந்து நிர்வாகிகள், என்.ராம், ரமேஷ், ரங்கராஜன் உள்ளிட்டோர் ரூ.300 சொத்தை, ரூ.30 கோடிக்கு திரும்ப தருமாறு, வற்புறுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

300 கோடி ரூபாய் சொத்தை, தர மறுப்பதால், ராம், ரமேஷ் உள்ளிட்டோர், காவல்துறையில் தம் மீது பொய்யான புகார் கொடுத்து, கைது செய்ய வைத்ததாகவும், குண்டர்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும், கே.சி.பழனிச்சாமி, கூறியுள்ளார். மேலும் சொத்து தொடர்பான ஆவணங்களை ஆள் வைத்து, திருடிச் சென்று விட்டதாகவும், ராம், ரமேஷ் மீது பழனிச்சாமி புகார் தெரிவித்துள்ளார். இந்த சொத்துக்கள் தொடர்பாக வழக்கு விசாரணை நடந்து வருவதாகவும், நிலத்தின் உரிமை தம்முடைய பெயரில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே, இந்து நிர்வாகிகள் என்.ராம், ரமேஷ், ரங்கராஜன் உள்ளிட்ட 8 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, காவல்துறையில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியுள்ளார். இந்த புகார் மீது மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தும்படி ஆணையர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக