புதன், 25 ஜனவரி, 2012

பா.ம.க Dr,ராமதாஸின் சகோதரர் கைது ,,கொலை வழக்கு

திண்டிவனம்: தமிழக அமைச்சர் சண்முகத்தின் உறவினர் கொலை வழக்கில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சகோதரர் சீனிவாசன் மற்றும் முன்னாள் பா.ம.க., தலைமை நிலைய செயலாளர் கருணாநிதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

திண்டிவனத்தில் உள்ள அமைச்சர் சண்முகம் வீட்டில் கடந்த 2006ம் ஆண்டு சட்டசபைத்தேர்தல் ஓட்டுப்பதிவு அன்று பா.ம.க.,வினர் புகுந்து  ஸின் அங்கிருந்தவர்களை தாக்கினர். இதில் அமைச்சரின் உறவினர் முருகானந்தம் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்,அவரது மகன் அன்புமணி மற்றும் பலர் மீது திண்டிவனம் போலீசில் சண்முகம் புகார் செய்தார். போலீசார் ராமதாஸ், அண்புமனி பெயரை விட்டுவிட்டு மற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்து 11 பேரை கைது செய்தனர். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அண்புமனி ஆகியோரது பெயர்கள் சேர்க்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்த சண்முகம், சி.பி.ஐ., விசாரணைக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன் பேரில் சி.பி.ஐ., விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கு தொடர்பாக பலரை சி.பி.ஐ., கைது செய்திருந்தது. இதில் பலரிடம் சி.பி.ஐ., போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.

இந்நிலையில் அமைச்சரின் உறவினர் கொலை வழக்கு தொடர்பாக ராமதாஸ் சகோதரர் சீனிவாசனை கைது செய்திருப்பதாக சி.பி.ஐ., கூறியுள்ளது. மேலும் இந்த வழக்கில் முன்னாள் பா.ம.க., தலைமை நிலைய செயலாளர் கருணாநிதியும் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் சி.பி.ஐ., தெரிவித்துள்ளது. கருணாநிதி என்பவர் கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சண்முகத்தை எதிர்த்து போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக