ஞாயிறு, 29 ஜனவரி, 2012

நயன் சம்பளம்! அதிரும் ஆந்திரா!ஒன்றரை கோடி

பலமாதங்களாகவே நயன்தாரா, பிரபுதேவா பற்றிய தகவல்கள் செய்திகளாகவும், வதந்திகளாகவும் உலா வ்ந்து கொண்டிருக்கின்றன. எதற்கும் வாய் திறக்காமல் இருக்கின்றனர் பிரபுதேவாவும், நயன்தாராவும்.
 “ஸ்ரீ ராம ராஜ்யம் தான் எனது கடைசி படம் என்று கண்ணீர் வடித்த நயன்தாரா, சிவபிரசாத் ரெட்டி தயாரிப்பில், தசரத் இயக்கும் தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறாராம். படத்தில் தனது கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்ததால் நயன்தாரா நடிக்க ஒத்துக் கொண்டார் என்கின்றனர் படக்குழுவினர்.
படத்தில் நடிக்க சம்பளம் ”ஒன்றரை கோடி”யாம். தெலுங்கு பட உலகில் எந்த முண்ணனி நடிகையும் வாங்காத இந்த சம்பளத்தை நடிக்க மாட்டேன் என்று சொல்லும் நயன்தாராவிற்கு கொடுக்கிறார்களே என்று தெலுங்கு பட உலகில் புகைச்சலாம். 
நயன்தாரா படங்களில் ஒப்பந்தமாக ஆரம்பித்துவிட்டதால், அவரது திருமணம் எப்போது தான்? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. பிரபுதேவா தான் இயக்கிவரும் இந்தி படத்தின் படப்பிடிப்புகளை மும்பை நகரத்தில் நடத்திக் கொண்டிருக்கிறார்.
பிரபுதாவாவும், நயன்தாராவும் இந்த மாதிரி தங்களது வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டுக்கொண்டிருப்பதால் தான் ”காதல் முறிந்தது” என செய்திகளை பரப்பிக் கொண்டிருக்கின்றனர் சிலர். மும்பையில் படு பிஸியாக இருக்கும் பிரபுதேவாவை, கேரளாவில் இருக்கும் நயன்தாரா வாரத்திற்கு ஒரு முறை சென்று பார்த்துவிட்டு வருகிறதாக தகவல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக