புதன், 25 ஜனவரி, 2012

நயன்தாராவின் இரண்டாவது இன்னிங்க்ஸ்!

பிரபுதேவாவும் நயன்தாராவும் திருமணம் செய்துகொள்ளப் போகும் சினிமா ஜோடிகள். இவர்களின் திருமணம் பற்றிய செய்திகள் அதிகம் வந்தாலும் திருமணம் என்ற செய்தி மட்டும் வெளிவருவதாக தெரியவில்லை.
 எப்படியும் இந்த வருடம் நடந்துவிடும் என்று பேசிக் கொண்டிருந்த ரசிகர்களின் பேச்சை பொய்யாக்கும் வகையில் திடீரென தெலுங்கு படமொன்றில் நயன்தாரா ஒப்பந்தமாகியிருப்பதாக தெரிகிறது.
“இது தான் என் கடைசி படம் இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை” என தான் நடித்த ஸ்ரீ ராம ராஜ்யம் படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கில் அழுது கொண்டே போன நயன்தாரா இனி நடிப்போம் என எதிர்பார்க்கவில்லையாம்.
”எப்போது திருமணம்” என்று அனைவரும் கேட்கும் கேள்விக்கு “இப்போதைக்கு இல்லை” என பதில் சொல்லும் விதமாக இந்த இரண்டாவது இன்னிங்க்ஸ் இருப்பதாக தெரிகிறது. கல்யாண ஜோரில் தான் படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு வீட்டிலேயே இருந்ததாக பேச்சு. 

நயன்தாரா புதிதாக ஒப்பந்தமாகியுள்ள தெலுங்கு படத்தில், நாகார்ஜூனாவின் காதலியாக நடிக்கிறார். தசரத் இயக்கத்தில் உருவாகப் போகும் இந்தப் புதிய படம் முழுக்க முழுக்க காதல் கதையாம். 

நயன்தாரா, நாகார்ஜுனாவுடன்ஏற்கெனவே ”பாஸ் ஐ லவ்யூ” என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளார். மே மாதம் படப்பிடிப்பு தொடங்குவதாகவும், தேவி ஸ்ரீபிரசாத் இசையமைப்பதாகவும் தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக