புதன், 25 ஜனவரி, 2012

நிர்வாண போஸ் - பயந்த நடிகைகள்


தீபன் இயக்கத்தில் மழைக்காலம் என்ற படம் தயாராகி வருகிறது. ஸ்ரீராம் மற்றும் பேராண்மை படத்தில் நடித்த சரண்யா ஹீரோ, ஹீரோயினாக நடிக்கின்றனர். 
படத்தில் நடிக்க அழைத்தபோது எந்த நடிகையும் முன்வராத நிலையில் தான் சரண்யா ஒப்பந்தமாகியிருக்கிறார். மற்ற நடிகைகள் ஓடி ஒளிந்ததன் காரணம் படத்தில் வரும் ஒரு காட்சி தான்.
படத்தின் கதை ஓவியக் கல்லூரியை சார்ந்திருப்பது தான் நடிகைகளின் பிரச்சினையாம். ஓவியக் கல்லூரியில் நிர்வாணமாக போஸ் கொடுப்பதற்கென்றே சில பெண்கள் இருப்பார்கள். அந்த நிர்வாணப் பெண் கேரக்டரில் நடிக்கத்தான் இந்த நடிகைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
”ஏன் பயப்புடுகிறீர்கள் கிராஃபிக்ஸ் போல நிறைய இருக்கிறது” என்று படக்குழு சொல்லியும் கேட்காமல் அனைவரும் ஓட்டம் பிடித்தது இந்த சமுதாயத்திற்கு பயந்து தான் என்கிறார்கள். இந்த படத்தில் நடித்தால் அடுத்து வரும் படங்களில் எல்லாம் அப்படியே நடிக்க சொல்லுவார்கள், மற்றவர்கள் எல்லோரும் எங்களை நிர்வாணக் கண்ணோட்டத்திலேயே பார்ப்பார்கள் என்று தங்கள் பக்க நியாயத்தை எடுத்து வைக்கிறார்கள் அந்த ஓட்டம் பிடித்த நடிகைகள்.

இந்நிலையில் தான் இந்த படத்தில் நடிக்க முன் வந்திருக்கிறார் நடிகை சரண்யா. பேராண்மை, காதல் என சில படங்களில் நடித்துள்ளார் சரண்யா. பேராண்மையில் நல்ல துணிச்சலான கேரக்டரில் நடித்த சரண்யா இதற்கு அஞ்ச மாட்டார் தான். இவரது துணிச்சலையும் நடிப்பில் உள்ள ஆர்வத்தையும் பாராட்டி அவரது சம்பளத்தை உயர்த்திக் கொடுத்துள்ளார் இயக்குனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக