திங்கள், 30 ஜனவரி, 2012

அழகிரி:மகனுக்கு நான் பதவியெல்லாம் கேட்கவில்லை



என் மகனுக்கு கட்சி பதவி கேட்டதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது. அந்த செய்தி பொய்யானது. அப்படி எந்த பதவியும் நான் கேட்கவில்லை. கேட்கும் எண்ணம் தற்போது இல்லை என்றார் அழகிரி.

மதுரை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இன்று தனது 61வது பிறந்த நாளை எளிமையான முறையில் மதுரையில் இன்று கொண்டாடினார்.
வழக்கமாக படு ஆடம்பரமாகவும், ஆர்ப்பாட்டமாகவும் அழகிரியின் பிறந்த நாளை மதுரையில் கொண்டாடுவார்கள் அவரது அடிப்பொடிகள். ஆனால் இந்த முறை அந்த பிரமாண்டம் மட்டும் மிஸ்ஸிங்.
இன்று காலை தனது வீட்டில் குடும்பத்தாரோடு கேக் வெட்டினார் அழகிரி. பின்னர் கோரிப்பாளையத்தி்ல உள்ள அண்ணா சிலைக்கு மாலையணிவிக்க ஆதரவாளர்களோடு கிளம்பிச் சென்றார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

ஒவ்வொரு ஆண்டும் தலைவர் கலைஞர் பிறந்தநாளை போல, ஏழைகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவாக எனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறேன். எனது எதிர்கால அரசியலைப்பற்றி கேள்வி எழுப்பினீர்கள். அதனை பொறுத்திருந்து பாருங்கள்.

எங்கள் குடும்பத்தினர் மீதும், திமுகவினர் மீதும் பொய்யான வழக்குகளை இந்த அரசு போட்டு வருகிறது. அதனை சட்டப்படி நாங்கள் சந்திப்போம்.

இந்த விழாவில் 17 ஆயிரம் பேருக்கு ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நலத்திட்டஙகளை வழங்குகிறோம். இதுதான் சிறப்பான விஷயம்.

என் மகனுக்கு கட்சி பதவி கேட்டதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது. அந்த செய்தி பொய்யானது. அப்படி எந்த பதவியும் நான் கேட்கவில்லை. கேட்கும் எண்ணம் தற்போது இல்லை என்றார் அழகிரி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக