வெள்ளி, 13 ஜனவரி, 2012

செல்போன் திருட்டு: சிக்கிக்கொண்ட மருத்துவக்கல்லூரி மாணவர் தற்கொலை

சேலத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருபாவர் கவுதம். காஞ்சிபுரத்தை சேர்ந்த இவர் சேலத்தில் உள்ள கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகிறார்.
வரது அறையில் உடன் தங்கியிருக்கும் ஷெரின் என்பவரின் 32 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய நவீன வசதிகைக்கொண்ட புதிய செல்போன் ஓன்று கடந்த சிலதினங்களுக்கு முன்னர் காணாமல் போய்விட்டது.
ஷெரின் தொலைந்து போன தன்னுடைய செல்போனில் இருக்கும் நம்பருக்கு கூப்பிடும் போதெல்லாம் இந்த என் “சுவிச் ஆப்” செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் மட்டும் வந்தது.
இரண்டு நாட்கள் செல்போனை தேடிய ஷெரின் பிறகு, புதிதாக ஒரு போன் வாங்கிக்கொண்டு தான், முன்பு பயன்படுத்திய “சிம்” கார்டின் நம்பரையே மீண்டும் வாங்கி கொண்டு வந்து விட்டார்.
ஆனால், புத்திசாலித்தனமாக சுவிச் ஆப் செய்யப்பட்டுள்ள தன்னுடைய மொபைல் போன் மீண்டும் ஆன் செய்தால் உடனடியாக தன்னுடைய நம்பருக்கு தொலைந்து போன மொபைல் போன் எந்த நம்பரில் இப்போது பயன்படுகிறது என்ற விபரங்கள் அடங்கிய தகவல் தன்னுடைய மொபைலுக்கு எஸ்.எம்.எஸ் ஆக வரும்படி ஒரு புதிய சாப்ட்வேரை தொலைந்து போன செல்போனில் பொருத்தியிருந்தார்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் ஷெரின் மொபைல் போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்துள்ளது. அதில், காணமல் போன தன்னுடைய 32 ஆயிரம் ரூபாய் செல்போன் இப்போது எந்த நம்பரில் செய்யல்படுகிறது என்ற விபரம் வந்துள்ளது.

கடலூரில் உள்ள அந்த எண்ணுக்கான முகவரியை கண்டு பிடித்து அங்கு சென்று, இந்த செல்போன் எங்கு வாங்கினீர்கள்...? என்று விசாரித்துள்ளார் ஷெரின்.

சேலத்தில் உள்ள ஒரு மொபைல் போன் கடையின் முகவரியை கொடுத்து அந்த கடையில்தான் நான் வாங்கினேன் என்று சொல்லியுள்ளார் செல்போனை வைத்திருக்கும் கடலூர் நபர்.

சேலத்தில், குறிப்பிட்ட அந்த கடைக்கு சென்ற ஷெரின் அங்கு  விசாரித்த போது, “ஆமாம் ஸார்” நாங்க தான் இந்த செல்போனை போனை விற்றோம், இது சுரேஷ் என்ற ஒரு “கஸ்டமர்” எங்களிடம் எக்சேஞ்க்கு கொடுத்து விட்டு போன போன் ஸார் இது என்று சொல்லியுள்ளனர்.

சுரேஷ் யார்...? அவர் எப்படியிருப்பார்...? என்று கேட்டுள்ளார் ஷெரின். ஒரே நிமிஷம் ஸார்...., மிஸ்டர் சுரேஷ் யார்னு நான் காட்டேரன் என்று தங்களின் கடையில் இருக்கும் சி.சி.டி கேமராவில் பதிவாகியிருந்த சுரேஷ் என்று சொல்லிய நபர் செல்போனை கொண்டு வந்து விற்பனை செய்யும் காட்சியை எடுத்து கணினியில் காட்டியுள்ளனர்.


அந்த காட்சியில், சுரேஷ் என்ற பெயரில் செரினின் 32 ஆயிரம் ரூபாய் செல்போனை விற்பனை செய்தவர் தன்னுடைய அறையில் தங்கி படித்துக் கொண்டிருக்கும் கவுதம் தான் என்பது தெரிந்து விட்டது.

கல்லூரி விடுதிக்கு சென்ற ஷெரின், எதற்க்காக என்னுடைய செல்போனை திருடிகொண்டு போய் விற்றாய்...? என்று கவுதமிடம் கேட்டுள்ளார்.

முதலில் தான் செல்போன் திருடவில்லை... என்று மறுத்த கவுதம், பிறகு ஷெரின் கையில் வைத்திருந்த எல்லா ஆதாரங்களையும் காட்டியதும் மவுனமானர்...

ஷெரினிடம் வசமாக சிக்கிக்கொண்ட கவுதம் இனி கல்லூரியில் தலைகாட்ட முடியாது என்ற அவமானத்தால் நேற்று இரவு தான் தங்கியிருக்கும் விடுதி அறையின் கழிவறைக்குள் சென்று பெற்றோலை ஊற்றி தீவைத்துக் கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஆட்டையாம்பட்டி போலீசார் கவுதமின் தற்கொலை பற்றி விசாரணை செய்துவருகிறார்கள்.அதிகப்படியான ஆசைகள் தான் மனிதனின் அழிவுக்கு காரணமாகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக