ஞாயிறு, 8 ஜனவரி, 2012

முல்லைப் பெரியாறு விவகாரம்-கேரள அரசு பொய் பிரச்சாரம் அம்பலம்

திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் பொய் பிரச்சாரம் அம்பலம் ஆகியுள்ளது.
கேரள முதல்வர் உம்மன் சாண்டி, எதிர்கட்சி தலைவர் அச்சுதானந்தன் ஆகியோர் முல்லைப் பெரியாறு உடையும் நிலையில் இருப்பதாக மக்கள மத்தியில் பீதியை கிளப்பி வருகின்றனர். அணை உடைந்தால் 5 மாவட்டஙகளைச் சேர்ந்த 50 லட்சம் மக்கள் அரபிக்கடலில் கலந்து விடுவார்கள் எனவும் அவர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் அவர்கள் கூறும் கருத்து பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் வருவாய்த் துறை ஆய்வு அறிக்கை முடிவு வெளியாகியுள்ளது. கேரள அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் அணை உடைந்தால் அரசு சார்பில் எடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது.
அதற்கு கேரள அரசு சார்பில் தாக்கல் செயயப்பட்ட பதில் மனுவில், அணை உடைந்தால் அதன கரையில் உள்ள 450 குடும்பங்கள் மட்டுமே பாதிக்கும். எனவே அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி விடுவோம் என கூறியிருந்தது. தற்போது தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்புக்காக 3 துணை தாசில்தார்கள் தலைமையில் கிராம நிர்வாக அலுவலக ஊழியர்கள் குழு குமுளி, பெரியாறு, மஞ்சமலை, உப்புதரை ஐயப்பன் கோவில் பகுதிகளின் ஆய்வறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

இதில் அணை உடைந்தால் 32,503 பேர் மட்டுமே பாதிக்கப்படுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கேரள அரசின் பொய் அம்பலமாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக