ஞாயிறு, 8 ஜனவரி, 2012

ஜெயாவின் மாட்டுக்கறியும் நக்கீரன் மீதான தாக்குதலும்

சொர்க்கவாசல் திறக்கப்படுகின்ற வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலை 2 மணிக்கெல்லாம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு வந்துவிடுவது சசிகலாவின் வழக்கம்.
அ.தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தகாலத்திலும்கூட, கோயிலில் சசிகலாவுக்கு வி.வி.ஐ.பி.யின் அந்தஸ்து வழங்கப்பட்டு வந்தது. அதனால், இந்தமுறை ஜனவரி 5-ந் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படும்போது, சசிகலாவின் வருகையும் வரவேற்பும் எப்படி இருக்கிறது என்பதை அறிவதற்காக இரவு 12 மணி முதல் காலை 6.30 மணிவரை பார்த்தசாரதி கோயில் வாசலிலேயே நாம் இருந்தோம். ஏகாதசியை லைவ் ரிலே செய்வதற்காக ஜெயா டி.வி. உள்பட பல சேனல்காரர்களும் வந்திருந்தார்கள்.
சொர்க்கவாசல் திறக்கப்படுகின்ற வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலை 2 மணிக்கெல்லாம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு வந்துவிடுவது சசிகலாவின் வழக்கம்.
அ.தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தகாலத்திலும்கூட, கோயிலில் சசிகலாவுக்கு வி.வி.ஐ.பி.யின் அந்தஸ்து வழங்கப்பட்டு வந்தது. அதனால், இந்தமுறை ஜனவரி 5-ந் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படும்போது, சசிகலாவின் வருகையும் வரவேற்பும் எப்படி இருக்கிறது என்பதை அறிவதற்காக இரவு 12 மணி முதல் காலை 6.30 மணிவரை பார்த்தசாரதி கோயில் வாசலிலேயே நாம் இருந்தோம். ஏகாதசியை லைவ் ரிலே செய்வதற்காக ஜெயா டி.வி. உள்பட பல சேனல்காரர்களும் வந்திருந்தார்கள்.
அறநிலையத்துறைக்கு மேலிடம் ஆர்டர்

நள்ளிரவில் ஏகாதசி பூஜை தொடங்கும்போது, பசுமாட்டை வலம் வரச் செய்வது வழக்கம். இதனையடுத்தே சசிகலா அங்கு வருவார். இம்முறையும் பசுமாடு வலம் வந்தது. அதையடுத்து, அங்கிருந்த போலீசார் பாதுகாப்பைப் பலப்படுத்தினர். வெளியில், க்யூவில் நின்றிருந்த மக்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. சசிகலா வருகைக்காகத்தான் இந்தப் பாதுகாப்பு கெடுபிடி என்று மக்களிடம் பேச்சு பரவியது. கொஞ்ச நேரத்தில், மக்களையும் மீடியாக்களையும் உள்ளே அனுமதித்தது போலீஸ்.

பா.ம.க.வின் முன்னாள் மத்திய இணையமைச்சர் வேலு போன்ற வி.ஐ.பிக்கள்தான் தரிசனத்திற்காக வந்தார்களே தவிர, சசிகலாவோ அவரது குடும்பத்தினரோ வரவில்லை. கோயில் நிர்வாகத்தினரிடம் இதுபற்றிக் கேட்டபோது, ""இந்த முறை அவாளுக்கு பாஸே அனுப்பல. அனுப்பப்படாதுன்னு அறநிலையத்துறைக்கு மேலிடத்திலிருந்து ஆர்டர் போட்டுண் டாளாம்'' என்றனர் யதார்த்தமாக. எதிர்க் கட்சியாக இருந்தபோதுகூட முக்கிய பிரமுகர் அந்தஸ்தோடு அனுமதிக்கப்பட்டு வந்த சசிகலாவுக்கு பாஸே கிடையாது என்ற உத்தரவின் மூலம் ஜெ.வின் கோபம் கொஞ்சமும் குறைய வில்லை என்பது புரிந்தது. சசிகலாவுடன் ஒவ்வொரு ஆண்டும் சொர்க்கவாசல் தரிசனத் திற்கு வருபவர் இளவரசி. இந்தமுறை அவரும் வரவில்லை.
தெம்பூட்டிய சர்வே ரிப்போர்ட்
அ.தி.மு.க.வின் வாக்குவங்கியில் முக்கிய பலமாக விளங்குவது முக்குலத்தோர் வாக்குவங்கி என்பதை அக்கட்சி நிர்வாகிகள் பலரும் பெருமை யோடு சொல்வது வழக்கம். சசிகலா குடும்பத்தினர் வெளியேற்றப்பட்டதால் அந்த வாக்குவங்கியில் பாதிப்பு ஏற்பட்டி ருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள மாநில உளவுத்துறை மூலம் ஒரு சர்வே எடுக்கச் சொல்லியிருந்தார் ஜெ. தற்போது அவர் கையில் அந்த சர்வே ரிப்போர்ட் உள்ளது.

சர்வே எடுக்கப்பட்ட பகுதியில் உள்ள முக்குலத்தோர் பலரும், ""சசிகலா குடும்பத்தால் எங்களுக்கு எந்த நன்மையும் கிடையாது. அவங்களும் அவங்களால சில அதிகாரிகளும் பலனடைஞ்சாங்க. அவங்கதான் நிறைய சம்பாதிச் சாங்க'' என்று சொல்லியிருக்கிறார்கள். முக்குலத்து சமுதாயத்துப் பெரியவர்களோ, ""ஊர்ப் பிரமுகர்ங்கிற மரியாதையைக்கூட சசிகலா குரூப்பும் அவங்களுக்கு வேண்டிய அதிகாரிகளும் எங்களுக்குத் தரமாட்டாங்க. மரியாதை இல்லாமத்தான் இருந்தோம். இப்ப அவங்களெல்லாம் போயிட்டதால, உண்மையாகவே இரட்டை இலைக்கு ஓட்டுப்போடுற முக்குலத் தோர்களா நிறைஞ்சிருக்கோம். இது கட்சிக் கும் புத்துணர்ச்சியைக் கொடுத்திருக்கு'' என்று சொல்லியிருக்கிறார்கள். சர்வே யில் இருந்த இந்த விவரங்களையெல் லாம் பார்த்த ஜெ., வெளியேற்றப்பட்ட வர்களால் முக்குலத்தோர் வாக்குவங்கி யில் எந்த பாதிப்பும் இல்லை என்பதை அறிந்து தெம்படைந்திருக்கிறார்.

மேலும், எந்தெந்த பிரச்சினை களில் மக்கள் நம் மீது கோபமாக இருக்கிறார்கள் என்றும், அதை எப்படி சரி செய்யலாம் என் றும் ஒரு சர்வே எடுக்க உத்தரவிட்டிருக்கிறார். அந்த அசைன்மென்ட்டில் உளவுத்துறை தற்போது பிஸியாக உள்ளது.
பொதுக்குழுவுக்குப் பிறகு நடந்த ஆலோசனை
தானே புயல் கரை யேறிய டிசம்பர் 30-ந் தேதி நடந்த பொதுக்குழு வில், கட்சியிலிருந்து நீக்கப் பட்டவர்களுடன் தொடர்பு வைத் திருப்பவர்களுக்கு மன்னிப்பே கிடையாது என்று ஆவேசப் புயலால் வீசித் தள்ளிய ஜெ., அதன்பின் போயஸ் கார்டனில் கட்சி நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தி யிருக்கிறார். அப்போது நடந்த பேச்சு வார்த்தைகளின்போது, ஜெ.விடம் உற்சாகமும் வருத்தமும் மாறி மாறி வெளிப்பட்டிருக்கிறது என்கிறது கார்டன் வட்டாரம்.

பொதுக்குழுவில் பி.ஹெச்.பாண்டி யனின் பேச்சு நன்றாக இருந்தது என்று பாராட்டிய ஜெ, அதுபோலவே பொன்னையன், வளர்மதி போன்றவர்களின் பேச்சுகளும் தன்னைக் கவர்ந்ததைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். அத் துடன், பொதுக்குழு மேடையில் சேவல் கட்சிக் காரர்களைவிட, புறா கட்சிக்காரர்கள்தான் அதிக ஆதரவுக்குரலில் பேசுனாங்க என்றும் சொல்லி யிருக்கிறார். (எம்.ஜி.ஆர். இறந்த பிறகு அ.தி.மு.க. ஜா.,ஜெ. என இரண்டாக உடைந்தபோது இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு, ஜெ. அணிக்கு சேவல் சின்னமும் ஜானகி அணிக்கு இரட்டைப்புறா சின்னமும் ஒதுக்கப்பட்டது) ""நான் இத்தனை காலமும் சேவல் ஆளுங்க, சேவல் ஆளுங்கன்னு நினைச்சி ஆதரவுகாட்டி நிறைய தப்பு பண்ணிட்டேன்'' என்றிருக்கிறார் வருத்தத்தோடு.
மயிலாப்பூர் மாஃபியாவா?
ஜெ.வுடன் ஆலோசனையில் ஈடுபட்டவர்களின் பேச்சு, சசிகலா விவகாரம் பற்றித் திரும்பியுள்ளது. அதை விரும்பாத ஜெ., ""அதைப்பற்றி பேசாதீங்க. நான் தவறான விதையை விதைச்சிட்டு விஷத்தை அறுவடை பண்ணிக் கிட்டிருக்கேன்'' என்று சொல்லிவிட்டு, கலைஞர் மீதும் வீரமணி மீதும் கோபத்தைத் திருப்பியிருக்கிறார். ""இவங்க இரண்டு பேரும், என் கூட இருக்கிறவங்களை மயிலாப்பூர் மாஃபியான்னு பிரச்சாரம் பண்ணுறாங்க. அதாவது நான் மாமியாம்.. என்கூட இருக்கிறவங்க மாமிகள் அதிகமுள்ள மயிலாப்பூர் மாஃபியாவாம். இந்த விமர்சனம் எம்.ஜி.ஆர். காலத்திலேயே கட்சிக்குள்ளே வந்தது. அப்ப அவர் என்ன சொன்னார் தெரியுமா'' என்று தன் முன்னே இருந்தவர் களைக் கேட்டுவிட்டு, அந்த சம்பவத்தை விளக்க ஆரம்பித் திருக்கிறார் ஜெ.

""நான் அரசியலுக்கு நுழைஞ்ச நேரம் அது. எம்.ஜி.ஆர். என்னைக் கூப்பிட்டு, இனி தன்னால ஊர்ஊரா சுற்ற முடியாதுன்னும், கருணாநிதிக்குப் போட்டியா ஜானகியை கொண்டு வரமுடியாதுன்னும் சொல்லி, அம்முதான் சரியான ஆள்னு என்னைக் காட்டி, கட்சி நிர்வாகிகள்கிட்டே சொன்னார். அதோடு, கொள்கை பரப்புச் செயலாளர் பதவியையும் கொடுத்தார். கே.ஏ.கே., எஸ்.டி.எஸ் போன்றவங்க கடுமையா எதிர்த்தாங்க. அப்ப பொன்னையன் இருந்தாரு. அவரு, "நம்ம கட்சியும் திராவிட இயக்கம்ங்கிற அடையாளத்தோடு இருக்கு. இதனோட கொள்கையை பரப்ப ஒரு பிராமினை நியமிக்கிறது சரியா இருக்காது'ன்னு சொன்னார். அப்ப எம்.ஜி.ஆர். "நீங்க அம்முவை பிராமின்னு நினைக்கிறீங்களா? பிராமின்னா குழைஞ்சு குழைஞ்சு பேசி காரியம் சாதிப்பாங்க. அம்மு எதையும் பட்பட்டுன்னு நேரில் பேசிடும். அப்புறம், இங்கே இருக்கிற நீங்க யாரும் மாட்டுக்கறி சாப்பிட்டிருக்க மாட்டீங்க. ஆனா, அம்மு ஸ்பென்சரிலிருந்து ஸ்பெஷல் பீஃப் வாங்கி எனக்கு சமைச்சிக் கொடுத்திருக்கு. நான்தான் பழக்கமில்லாததால அதை சாப்பிடலை. மாட்டுக்கறி சாப்பிடுற அம்முவை எப்படி பிராமின்னு நினைக்கிறீங்க'ன்னு சொன்னார். இன்னைக்கு கருணாநிதியும் வீரமணியும் நான் பிராமின்னும் என்கூட இருக்கிறவங்களை மயிலாப்பூர் மாஃபியான்னும் சொல்றாங்க'' என்றபடி சிரித்திருக்கிறார்.
சசிகலா இல்லாத இடத்தில்...
கார்டனிலிருந்து சசிகலாவும் அவருடைய ஆட்களும் வெளியேற்றப்பட்டுவிட்ட நிலையில், அங்கே புதிய நபர்கள் உலவிக் கொண்டிருப்பதை கட்சி நிர்வாகிகளே ஆச்சரியத் தோடு பார்க்கிறார்கள். கார்டன் பணிகளைக் கவனிப்பதில் தற்போது முதன்மையாக இருப்பவர், டைரக்டர் எஸ்.ஏ.சந்திர சேகரின் மனைவியும் நடிகர் விஜய்யின் அம்மாவுமான ஷோபாசந்திரசேகர்தான். படிக்கின்ற காலத்திலிருந்தே ஜெ.வுக்கும் ஷோபாவுக்கும் நல்ல நட்பு உண்டு. தேர்தல் நேரத்தில் எஸ்.ஏ.சி. குடும்பம் அ.தி.மு.க.வுக்கு, தானாக முன் வந்து உதவி செய்தது. இப்போது அதற்கான பிரதிபலனை எதிர்பார்க்கின்ற விதத்தில், கார்டன் பணிகளைக் கவனித்து வருகிறார் ஷோபாசந்திரசேகர்.

அவருடன் மற்றொரு பெண்மணியும் இருக்கிறார். இவர் ஜெ.வின் உறவுப் பெண்மணி என்கிறது கார்டன் வட்டாரம். மூன்றாவதாக, ஜெ. சினிமாவில் நடித்த போது உடன் நடித்த ஒரு நடிகையும் தற்போது கார்டனில் இருக்கிறாராம்.
சசிகலா என்ன செய்கிறார்?
"அக்கா சொன்னபடி நான் இங்கே யே இருக்கிறேன்' என்று இளவரசியின் மகள் ப்ரியாவின் தியாகராயநகர் வீட்டி லேயே இருக்கும் சசிகலாவுக்கு சுகர் அதிகமாகி, மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. டாக்டர் கள் செக்கப் செய்து, உரிய மருந்துகளைக் கொடுத்துவிட்டு, வாக்கிங் போக வேண்டும் என்று சொன்னதால், தான் தங்கியுள்ள வீட்டின் மொட்டை மாடியிலேயே தற்போது தினமும் வாக்கிங் போய்க்கொண்டி ருக்கிறார் சசிகலா. அவரது வட்டாரத்து ஆட்களோ, ""கார்டனில் இருந்தபோது அடிக்கடி தி.நகருக்கு வந்துவிடுவார் சசிகலா. சட்டென அடையாளம் தெரியா மல் இருப்பதற்காக சுடிதார் அணிந்து கொள்வார். காரை ஓரமாக நிறுத்தச் சொல்லிவிட்டு, இறங்கி நடந்து போய் கடைகளுக்குச் சென்று பழம் வாங்கி வருவார். ஒரு நடைபயிற்சிபோல் இதை செய்வார். கார்டனிலிருந்து வெளியேற்றப் பட்டபிறகு, அவர் எங்கும் போகவில்லை. நடைபயிற்சி இல்லாததால் சுகர் ஏறி, மயக்கம் ஏற்பட்டுவிட்டது'' என்கிறார்கள்.

அதே நேரத்தில், "மயக்கம் வரவைக் கும் பல அதிரடி நடவடிக்கைகள் சசிகலா தரப்பின் மீது தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்' என்கிறது கார்டன் தரப்பு.

-உமர்முக்தார்
thanks nakkeeran +raj trichy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக